Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கூமாப்பட்டி” என் பக்கத்து ஊரு தான்.. பல முறை போய் இருக்கிறேன்.. ஆனால், அங்கே! பிக் பாஸ் தினேஷ் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் இரண்டு நாட்களாகவே கூமாப்பட்டி என்ற கிராமத்தைப் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. விருதுநகர் பக்கத்தில் இருக்கும் இந்த ஊர் "மினி ஐலாண்ட்ங்க" என்று ஒரு youtuber பேசிய வீடியோ தான் சோசியல் மீடியா எங்கும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்த கூமாப்பட்டி எங்கே என்று இணையத்தில் தேடிப் பார்ப்பவர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஊர் பக்கத்து ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பிக் பாஸ் பிரபலம் தினேஷ் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றை சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு பகிர்ந்து இருக்கிறார்.

சோசியல் மீடியாவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர் பார்க்காத சில விஷயங்கள் எல்லாம் ஓவர் நைட்டில் ட்ரெண்டாகி விடுகிறது. அந்த வரிசையில் தான் இப்போது கூமாப்பட்டி என்ற ஊரும் பலருடைய தேடலுக்கு காரணமாக இருக்கிறது. விருதுநகர் என்றால் எப்படி காமராஜர் பலருக்கும் ஞாபகம் வருமோ அதே போல விருதுநகர் ஊரு வெயிலுக்கு பிரசித்தி பெற்றது. கந்தக பூமி என்று அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டத்தில்தான் இந்த கூமாபட்டி ஊரு இருக்கிறது.

Koomapatti Virudhunagar Dinesh

ட்ரெண்டான கூமாப்பட்டி

ஆனால் இந்த ஊரை சேர்ந்த ஒரு youtuber தன்னுடைய ஊர் அருவியில் குளிக்கும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். அதில் ஊட்டி, கொடைக்கானல் எதுக்குங்க எங்க ஊரு வந்து பாருங்க. இங்க உள்ள தண்ணி சர்பத் மாதிரி இருக்கும். காதல் தோல்வியா? இங்க வந்து குளிங்க, குழந்தை இல்லையா இங்க வாங்க என்று கூவி கூவி அழைத்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஊர் பக்கத்து ஊரை சார்ந்த நடிகரும் பிக் பாஸ் பிரபலமான தினேஷ் தன்னுடைய அனுபவங்களை பிரபல தனியார் சேனலுக்கு பகிர்ந்திருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆக வருகிறது.

கூமாப்பட்டி யூடியூபர்

அதில் தினேஷ் பேசும்போது எனக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் தான் இந்த கூமாப்பட்டி ஊர் இருக்கிறது. ஸ்கூல் படிக்கும்போது முதல்முறையா டூருக்கு இந்த கூமாப்பட்டி கிராமத்துக்கு தான் கூட்டிட்டு போனாங்க. அதற்குப் பிறகு வளர்ந்ததும் பிரண்ட்ஸ்க்கு கூட அடிக்கடி அங்க போயிருக்கிறேன். இப்போ அந்த யூ டியூபர் தம்பி செய்த வேலையால் கூமாம்பட்டி பிரபலம் ஆகி இருக்கு.

பிக் பாஸ் தினேஷ் பேட்டி

இதே மாதிரி அங்க நிறைய ஊரு இருக்கு பக்கத்தில் வக்ராயிருப்பு, செண்பகத்தோப்பு, தாணிப்பாறை, சதுரகிரி, கான்சாபுரம் என அங்கு எங்க பாத்தாலும் செழிப்பான கண்ணுக்கு குளிர்ச்சியான பகுதிகள் அதிகம் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் பருவ தென்மேற்கு பருவ காலம் தொடங்கிச்சின்னா ஜில்லுனு கிளைமேட் இருக்கும். அந்த வீடியோவில் தம்பி சர்பத்து போல தண்ணீர் இருக்குன்னு சொல்லுவாரு அது உண்மைதான். மலை மேல இருக்கிற மூலிகைகளை தழுவி வர்ற தண்ணிங்கறதால அந்த தண்ணி அவ்வளவு இனிமையா இருக்கும். இதை நான் ஊருகாரன் என்பதற்காக சொல்லவில்லை.

மன நிம்மதி தரும் இடம்

கொரோனா காலகட்டத்தில் சீரியல் சூட்டிங் எதுவும் இல்லாத நேரத்தில் நான் அங்க என்னுடைய நண்பர்களின் தோட்டத்தில் தான் தங்கி இருந்தேன். சதுரகிரி கிரிவலம் முன்னாடி இந்த அளவுக்கு அங்கே கட்டுப்பாடுகள் கிடையாது பக்தர்கள் அதிகமான வர ஆரம்பிச்ச பிறகு வனத்துறை கண்காணிப்பு வந்துடுச்சு. சுற்றுச்சூழல் பிரச்சனை வரக்கூடாதுன்னு பல முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று தினேஷ் கூறியிருக்கிறார்.

வனத்துறை அறிவிப்பு

கூமாப்பட்டி பிரபலமானதை தொடர்ந்து அந்த வைரல் இளைஞர் தங்கபாண்டி வெளியிட்ட வீடியோவை பார்த்து பலரும் அந்த ஊருக்கு படையெடுத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இங்க யாரும் வர வேண்டாம், வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறது என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என வனத்துறை அறிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+