குட்டி சுட்டீஸ் கோவை சரளா எப்புடீ?
சென்னை: சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை புதிதாக நகைச்சுவை மற்றும் குணச் சித்திர நடிகை கோவை சரளா தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கார்.
எப்போதும் போல குழந்தைகளிடம் குடும்பம் பற்றி பேசுகிறார்கள். இமான் அண்ணாச்சி போல இவர் தொகுத்து வழங்குவதும் ஓகே ரகம்தான்.
இருந்தாலும் இமான் அண்ணாச்சி இல்லாமல் கோவை சரளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது என்பது எந்த வித மைனஸையும் காண்பித்துக் கொடுக்கவில்லை.

குழந்தைகள் தென்றல் மாதிரி
குழந்தைகள் உலகம் புதிதாக அவ்வப்போது வீசும் தென்றல் மாதிரி. என்னதான் அவர்கள் அதிரடியாக பேசினாலும், அவர்களின் மழலை அதிரடியையும் மென்மையாக்கி விடும். அவர்கள் உலகத்தில் அம்மா அப்பா குடும்பம் தவிர விளையாட்டு, பள்ளி, டீச்சர், பள்ளியில் உடன் படிக்கும் குழந்தைகள்., பள்ளிக்குப் போக்கு வரத்து எப்படி என்கிற பல விஷயங்கள் இருக்கிறது.

அப்பா திட்டுவாரா
உங்க அம்மவுக்கு கோவம் வந்தால் என்ன செய்வாங்க... அப்பாவுக்கு அம்மா மேல கோவம் வருமா? வீட்டில் சமையல் யார் செய்வாங்க இது போன்றே குழந்தைகளிடம் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கலாமே.. குழந்தைகள் உலகம் இப்போது பெரியவர்கள் உலகத்தை விட மிகப் பெரியதாக மாறி இருக்கிறது.

தவிர்த்து இன்னும்
குழந்தைகள் வீடு பள்ளி தவிர்த்து முக்கியமாக விளையாட்டு என்கிற பெரிய உலகத்தில் இருக்கிறார்கள்.அவர்களின் விளையாட்டு இப்போது செல்போனுக்குள் சுருங்கிக் கிடக்கிறது. இவர்களின் விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டிவிடும் படி நிகழ்சசியை கொண்டு போகலாம்.

கோவை சரளா
இமான் அண்ணாச்சி போலவே கோவை சரளாவும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தால் நிச்சயம் போரடித்துத்தான் போகும். கொஞ்சம் மாத்தி யோசித்தால் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் ரசிக்கும்படி நடத்தி வரலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications