சினிமாவில் கிடைத்த வருமானத்தில் 2 வீடு கட்டி கொடுக்கிறேன்.. விஜய் பற்றிய கேள்விக்கு பாலாவின் எதிர்பாராத பதில்
சென்னை: நடிகரும் விஜய் டிவி பிரபலமான கேபிஒய் பாலா தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் தான் 30 ஆவது பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமர்சனமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அப்போது தான் நடித்த திரைப்படத்தில் கிடைத்த வருமானத்தின் மூலமாக தான் இரண்டு குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதோடு விஜய் பற்றிய கேள்விக்கும் பதில் கொடுத்து இருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்திருக்கும் பாலா மீது அதிகமான எதிர்பார்ப்பும், மரியாதையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அவர் தன்னுடைய சொற்ப வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு மட்டுமல்லாமல் ஆதரவற்ற ஊருக்கு அடிப்படை செலவுகள் தொழில் தொடங்குவதற்கு உதவி என்று பலவற்றை செய்து வரும் பாலா கடந்த சில வருடங்களுக்கும் முன்பு நடிகர் சமூக சேவகருமான லாரன்ஸ் மாஸ்டர் உடன் சேர்ந்து உதவிகள் செய்ய தொடங்கி இருக்கிறார்.

விமர்சனங்கள்
உதவிகள் செய்தாலும் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வரும் பாலா அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் உதவி செய்து கொண்டிருப்பதால் இவர் கடைசி காலத்தில் கஷ்டப்பட வேண்டும் என்று பலர் அவருக்கு இலவச அட்வைஸ் கொடுக்கிறார்கள். ஆனால் நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று பாலா உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
முப்பதாவது பிறந்தநாள்
சமீபத்தில் அவர் முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அவருடைய பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் பாலாவை போலவே கஷ்டப்படுகிறவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து இருந்தனர். அதை பாலா முன் நின்று நடத்தி வைத்திருந்தார். சென்னை ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பாலாஜிக்கு அங்கிருந்தவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்திருந்தனர்.
4 லட்சம் நலத்திட்டம்
பிறகு சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கப்பட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலா மகிழ்ச்சியாக பேசியிருந்தார். தனக்கு சினிமா மூலம் கிடைத்த வருமானத்தில் விழுப்புரம் மற்றும் ஆரணி ஆகிய பகுதிகளில் இரண்டு வீடுகள் கட்டிக் கொடுத்து இன்று திறப்பு விழா நடைபெற்றதாகவும், இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய் பற்றிய கேள்வி
மேலும் ராணிப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிறந்தநாள் விழா தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் அதற்கு காரணம் தன்னை பின் தொடர்ந்து இப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகளை ரசிகர்கள் வழங்கியது எனக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது. இதே போல அனைத்து வேலை மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருவேன் என்று தெரிவித்து இருந்தார். அப்போது அவரிடம் தாவெக தலைவர் விஜய் பற்றி கேள்வி எழுப்பி எதற்கு அவர் லெஜன்ட் அவரைப் பற்றி கருத்து கூறும் அளவிற்கு நான் வளரவில்லை என்று கூட்டத்தில் நகைச்சுவையாக பேசி இருந்தார். அதோடு அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரிடமும் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்து இருந்தார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications