ரோட்டு கடையில் இட்லி சாப்பிட்டாலும் கேமரா? கேபிஒய் பாலாவின் பழக்கம்.. மடியில் கனமில்லை? இதை செய்வாரா
சென்னை: கேபிஒய் பாலா செய்து வரும் உதவிகள் தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. எனினும் பாலாவை சுற்றி சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன.. இதற்கு பாலாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.. இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க வேண்டுமானால், மடியில் கனமில்லை என்பதை கேபிஒய் பாலா மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "சின்னத்திரையில் கால் பதித்து, குறுகிய காலத்தில் சொந்தமாக படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பவர் கேபிஒய் பாலா.. அமெரிக்கா வரை நிகழ்ச்சி நடத்த சென்று வருகிறார்.

அதேநேரத்தில் ஆம்புலன்ஸ்களை நல்ல எண்ணத்துடன் பலருக்கு வாங்கி தந்துள்ளார்.. ரஜினி, கமல், விஜய் போன்றோரே இந்த வேலையை செய்யவில்லை.. ஆனால், பாலா இதை செய்கிறார்..
இதுபோலவே ராகவா லாரன்ஸ், ஒரு தொண்டு அறக்கட்டளையை வைத்து செய்து கொண்டிருந்தார்.. இந்த அறக்கட்டளைக்கு நல்ல எண்ணத்துடன், பல கோடி ரூபாய் நன்கொடையாளர்கள் தந்தனர்.. இப்படி பல கோடி ரூபாய் பணம் வரவும் திக்குமுக்காடி போனார் லாரன்ஸ். இதனால் வரும் விளைவுகளை யோசித்து, அந்த அறக்கட்டளையை கலைத்துவிட்டு, சொந்த பணத்தில் உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.
பாலாவின் கெட்ட பழக்கம்
இதற்கு பிறகு, இலவச தொண்டு செய்யும் நபராக கேபிஒய் பாலா வளர்ந்து வருகிறார். ஆனால், இவரிடம் உள்ள கெட்ட பழக்கம், ரோட்டுக் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டாலும், கேமரா டீமுடன் அந்த கடைக்குள் நுழைகிறார். இப்படியான செயற்கைதான் சந்தேகங்களை கிளப்புகிறது..
பாலா செய்யும் உதவிக்கு பின்னால் பெரிய அரசியலும் உள்ளது.. அதாவது, இப்படி செய்யும் உதவிகளை வைத்து விளம்பரம் தேடி, தன்னை மேலும் வளர்த்து கொள்கிறார்.. இப்படி தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதால், நிறைய பண உதவிகளும் பாலாவுக்கு கிடைக்கக்கூடும். தன்னுடைய சினிமா வளர்ச்சிக்காகவே, தான் செய்யும் உபகாரங்களை பயன்படுத்தி கொள்வதாக, சக கலைஞர்களுக்கே சந்தேகம் வருகிறது.
வருமான வரித்துறை
அதுமட்டுமல்ல, நேபாளத்தை போல, பங்களாதேஷை போல, மேற்கு வங்கத்தை போல புரட்சி படையை பாலா உருவாக்குகிறார் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் சொல்கிறார்.. இவ்வளவு சக்தி வாய்ந்தவரா பாலா? அப்படியானால் ஏதோ ஒரு அரசியலுக்கு பின்னிருந்து, ஏதோ ஒரு பிரபல நடிகருக்கு ஆதரவாக, இந்த பத்திரிகையாளர் பேசுவது போல உள்ளது.
அதேபோல 20 ஆம்புலன்ஸ்களை பாலா வாங்கி தந்துள்ளாராம்.. ஆனால், கார் நம்பர்கள் அந்த ஆம்புலன்ஸ்களில் இருப்பதாக சொல்கிறார்கள்.. இந்த 20 ஆம்புலன்ஸ்களை வாங்க, எங்கிருந்து பணம் வந்தது? எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? என்பதை வருமான வரித்துறையினரிடம் பாலா காண்பிக்க வேண்டும்.. மடியில் கனமில்லை என்பதை பாலா தெளிவுப்படுத்த வேண்டும்..
சின்ன கிளினிக்குக்கு படம் ஏது
பெரிய ஆஸ்பத்திரி கட்டவில்லை, சின்ன கிளினிக்தான் கட்ட போகிறேன் என்கிறார் பாலா.. கிளினிக் கட்ட பணம் ஏது? என்ற விளக்கமும் பொதுமக்களுக்கு போய் சேர வேண்டும் இதை இதுவரை பாலா சொல்லவில்லை.
பாலா உதவிகளை செய்து, அதன்மூலம் ரஜினி அளவுக்கு புகழை அடையட்டும்.. ஆனால், எம்ஜிஆரை போல பாலா வெளிப்படையாக இருக்க வேண்டும்.. வடபழனி, ராமாவரம், கேகேநகர், மாம்பலத்தில் எத்தனையோ எம்ஜிஆர் பள்ளிக்கூடங்கள் உள்ளன... பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடங்களை மக்களுக்காகவே தந்துவிட்டார் எம்ஜிஆர்.
விஜய் கல்யாண மண்டபம் வாடகை
ஆனால் விஜய் கட்டியுள்ள ஷோபா கல்யாண மண்டபத்தில், ஒருநாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? பாலாவை போல பாலாக்கள் உருவாக்க வேண்டும் என்பதே நம் ஆசை.. எம்ஜிஆரை போல பாலா உருவாக வேண்டும் என்பதே நம்முடைய எண்ணம்.. ஆனால் பாலாவிடம் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.. எனவே தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வரவு-செலவுகளை பதிவிட்டால் போதும், தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களை பாலா தவிர்க்கலாம்.
பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் காமராஜரை போல இருக்க வேண்டும்.. கக்கனை போல இருக்க வேண்டும்.. பெரியாரை போல இருக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications