Kpy பாலா என் தம்பி தான்! அவர் காமெடி பிடிக்கும்! இப்போ அவரோடு கைகோர்க்கிறேன்! நெகிழ வைத்த விஜய பிரபாகரன்
சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் பாலா, தனது அனல் பறக்கும் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். பன்ச் பாலா என அழைக்கப்படும் இவர், தனது தனித்திறமையால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு உயர்ந்தார். தற்போது, அவரது மனிதநேய உதவிகளுக்காக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அவருக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

பன்ச் பாலாவின் பயணம்
கிராமத்தில் இருந்து எப்படியாவது சினிமாவில் ஒரு பிரபலமாக வேண்டும் என்று ஆசையோடு சென்னைக்கு வந்த பாலாவிற்கு விஜய் டிவியில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தலை காட்ட வாய்ப்பு கிடைத்தது. பிறகு பாலா இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சியே இல்லை என்ற நிலை இருந்தது. தனது நகைச்சுவை உணர்வாலும், திறமையான பேச்சாலும் அவர் விரைவாக உயர்ந்தார்.
சினிமா கனவு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பாலா, சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க கதாநாயகனாக வேண்டும் என்ற கனவுடன் அவர் வலம் வந்தார். ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக "காந்தி கண்ணாடி" என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
மனிதநேய பாலா
பாலாவுக்கு வரும் பணத்தை தனக்கென வைத்துக் கொள்ளாமல் ஏழை எளிய மக்களுக்காக செலவழித்து வருகிறார். புயல், மழை என எதுவாக இருந்தாலும் ஓடிச் சென்று தனது அக்கவுண்டில் இருக்கும் முழு பணத்தையும் அவர்களுக்காக செலவழிக்கும் மாமனிதன் பாலா. அவர் செய்யும் உதவிகள் கூட சில நேரங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பாலாவிற்கு இவ்வளவு உதவிகள் செய்வதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னுடைய செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை ஒவ்வொரு நாளும் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவி செய்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் ஆதரவு
பாலாவின் மனதை பார்த்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஒருமுறை அவரிடமே "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு பாலா "அண்ணா நான் ஹீரோவாக வேண்டும்" என்று சொல்ல, ராகவா லாரன்ஸ் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.
விஜய பிரபாகரன் அரவணைப்பு
இந்த நிலையில், விஜயகாந்தின் மகனும் தேமுதிக கட்சியின் இளைஞரணி பொதுச் செயலாளருமான விஜய பிரபாகரன் பாலாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பாலாவை பற்றி விஜய பிரபாகரன் பேசியது பலருடைய பாராட்டை பற்றி வருகிறது அதாவது, "நான் பாலா பிரதரோட மிகப் பெரிய ரசிகன். ரொம்ப மன அழுத்தம் இருக்கும்போது அவருடைய வீடியோஸ் தான் பார்ப்பேன். அதே மாதிரி இப்போ நிறைய சேவை செஞ்சுகிட்டு இருக்காரு, அதைத் தொடர்ந்து பண்ணுங்க பிரதர். உங்க சக்திக்கு மீறிய உதவி என்ன வேணும்னாலும் என்னை கேளுங்கள் பிரதர். இதை நான் மனப்பூர்வமாக சொல்கிறேன். நிச்சயம் இந்த விஜய பிரபாகரை நீங்க கூப்பிடலாம். நான் உங்க கூட ஒரு அண்ணனாக இருந்து அரசியலை தாண்டி கேப்டன் ஆசைப்பட்ட மனிதநேயத்தை பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
பாலாவின் விடாமுயற்சிக்கு இப்போது பலர் ஆதரவு கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள் பொதுமக்கள் பலரும் பாலாவை பாராட்டி ஒரு நிலையில் பிரபலங்களும் பாலாவுக்காக கை கொடுக்க நினைத்திருப்பது நல்ல விஷயம் இதனால் பலர் பயன்பெறுவார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications