காந்தி கண்ணாடி பேனரை கிழித்த சில்லறைத்தனம்.. கேபிஒய் பாலா வளர்வதை தடுக்கும் சிவகார்த்திகேயன்? பிரபலம்
சென்னை: விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ஷோவைப் பார்த்தவங்களுக்கு, பஞ்ச் பாலாவை தெரியாம இருக்க முடியாது. தன்னோட அனல் பறக்கும் கவுண்டர் பேச்சால, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வச்ச பாலா, அந்த ஷோவின் ஆறாவது சீசனோட டைட்டில் வின்னர். ஒரு காலத்துல, விஜய் டிவியில் பாலா இல்லாத ஷோவே இல்லன்னு சொல்ற அளவுக்கு, அவரோட தனித்திறமையால பெரிய உயரத்தை எட்டினார். தற்போது அவர் நடித்த காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் நேற்று அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு
காந்தி கண்ணாடி படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே, பாலா சின்ன சின்ன கேரக்டர்கள் மற்றும் காமெடி ரோல்கள்ல நடிச்சு, தனக்கு கிடைச்ச வாய்ப்புகளை நல்லா பயன்படுத்திக்கிட்டார். ஒரு கலைஞன் சம்பாதிச்ச பணத்துல வீடு, கார் வாங்குறதுதான் வழக்கம். ஆனா, பாலா தனக்கு கிடைச்ச பணத்துல ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவி பண்ணிட்டு வந்தார்.
அவருடைய நல்ல மனசையும், சமூக சேவையையும் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், பாலாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சு, ஒருநாள் அவரே பாலாகிட்ட, "உனக்கு என்ன வேணும்?"னு கேட்டிருக்கார். அதுக்கு பாலா, "அண்ணா, நான் ஹீரோவா ஆகணும்"னு சொல்லியிருக்கார். உடனே ராகவா லாரன்ஸ் சம்மதம் சொல்லியிருக்கார். கூடிய சீக்கிரம் ராகவா லாரன்ஸ் தயாரிப்புல பாலா ஹீரோவா நடிக்கிற படத்தோட அறிவிப்பு வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி கண்ணாடி பட சென்டிமென்ட்
ராகவா லாரன்ஸ் தயாரிப்புல படம் வரதுக்கு முன்னாடியே, காந்தி கண்ணாடி படம் மூலமா தமிழ் சினிமாவுல ஹீரோவா அறிமுகமாகிட்டார் பாலா. போன வாரம் ரிலீஸ் ஆன இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்திருக்கு. முதல் படத்திலேயே சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் காட்சிகள் நிறைஞ்சு இருந்ததால, குடும்ப ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடிட்டு இருக்காங்க. ஆனா, பெரிய ஹீரோக்கள் படம் ரிலீஸ் ஆனதால, இந்தப் படத்தோட வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
கல்யாண வயசு வந்துடுச்சு
சினிமாவுல ஹீரோவாகிட்டதால, "எனக்கு இப்போ கல்யாண வயசு வந்துடுச்சுடி!"ங்கிற பாட்டை பாலாவிற்கு டேக் பண்ணி, "எப்போ கல்யாணம்?"னு அவரைத் துரத்த ஆரம்பிச்சுட்டாங்க ரசிகர்கள்.
சமீபத்துல ஒரு பேட்டியில, பாலா இதற்குப் பதில் அளிக்கும்போது, "நான் சம்பாதிக்கிறது எல்லாமே மக்களுக்காகத்தான். கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால, இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா எனக்கில்லை. கடந்த அஞ்சு வருஷமா, என்ன மதிச்சு நிறைய மக்கள் மனு கொடுத்திருக்காங்க. அவங்களுக்காக ஓடிக்கிட்டே இருக்கறதால, இப்போதைக்கு கல்யாணம் பண்ற எண்ணம் இல்லை"னு சொல்லியிருக்கார்.
"என் உயிரும் உடலும் உழைப்பும் தமிழ் மக்களுக்கே"ன்னு வாழ்ந்துட்டு இருக்கற பாலா, புகழ் வெளிச்சத்துக்காக ஓடாம, மக்களுக்கு உதவி செய்வதை இருக்கிறதை பார்க்கும்போது, அவர் வாழ்க்கையில இன்னும் பெரிய உயரத்துக்கு போவார்னு நம்பலாம்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications