சிக்னலில் பிச்சை எடுப்பேனா? உதவி செய்ய காரணமே இதுதான்? 5வது ஆம்புலன்ஸ் கொடுத்து kpy பாலா உருக்கம்
சென்னை: டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைந்த பாலா வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கி இருக்கிறார். அப்போது தான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று வரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதற்கு பிறகு சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதோடு தனக்கு கிடைக்கும் வருமானத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தன்னுடைய செலவில் இதுவரைக்கும் நான்கு ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். அதுபோல கர்ப்பிணிகளுக்கு இலவசமான ஆட்டோ ஒன்றையும் வழங்கி இருக்கிறார். மலை கிராம மக்களுக்கு விவசாய உபகரணங்களையும் வழங்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் தான் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கித் தவித்த 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியிருந்தார் . பாலாவின் இந்த செயல்களை பலரும் பாராட்டி வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் கூட பாலாவை பற்றி பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை
கிராமத்தில் பொதுமக்களுக்காக தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை பாலா வழங்கியிருக்கிறார்.
அந்த கிராமத்தில் சுமார் 172 குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்களாம். இது குறித்து பாலா அங்கு செய்தியாளர்களிடம், இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்தேன். அதைக் கேள்விப்பட்டதும் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது அப்படி ஒரு பெண்ணல்ல, பல பெண்களை கயிறு கட்டி கீழே இறக்கி இருக்கிறார்களாம்.
ஆனால் அப்படி கயிறு கட்டி இறக்கும்போது நிறைய பெண்களுக்கு பாதி வழியிலேயே பிரசவம் ஆகிவிடுகிறது என்றும் கேள்விப்பட்டேன். அதுபோல இந்த கிராமத்திற்கு ஏறி வருவது மிகவும் கடினமாக இருக்கிறது. அதனால் இந்த ஐந்தாவது ஆம்புலன்ஸை இந்த கிராமத்திற்கு வழங்கி இருக்கிறேன் எனவும், அதோடு எனக்கு தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.
அதுபோல உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதாவது நான் செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் ஆமா இருக்கிறார்கள் தான்.... அது என்னவென்றால் அவமானம், கஷ்டம் ஆகியவை தான். இவையெல்லாம் என் பின்னால் இருப்பதால்தான் நான் இந்த மாதிரி உதவிகளை செய்து வருகிறேன்.
அதோடு சிலர் என்னை பற்றி சமூக வலைத்தளத்தில் கமெண்ட் போட்டு வருவதையும் நான் பார்த்திருக்கிறேன். அதில் எதிர்காலத்தில் நீ சிக்னலில் பிச்சை எடுப்ப, அப்போது கூட நான் உனக்கு பிச்சை போடாமல் தான் போவேன் என்று சிலர் கமெண்ட் செய்கிறார்கள். ஆனால் நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ அந்த சிக்னலில் நான் கொடுத்த ஆம்புலன்ஸும் வரும்... எனவே எனக்கு அது ஒரு பிரச்சனையே இல்லை, என்று அந்த நிகழ்ச்சியில் பாலா பேசி இருக்கிறார்.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications