விளையாட்டு வினையாக மாறியது... பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து கோபத்தில் வெளியேறிய நாஞ்சில் விஜயன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு சீசன் 4 ஏப்ரல் 2ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்கிரிப்டில் இல்லாத படி தனக்கு மேடையில் நடப்பதாக கூறி நாஞ்சில் விஜயன் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அடிக்கடி நிகழ்ச்சிகளில் பிராங்க் செய்து கொண்டிருந்தாலும் தற்போது இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றது ப்ராங்கா அல்லது ரியலா என்று பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.

பெண் வேடம்
விஜய் டிவியில் மூலம் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து கோபத்தோடு வெளியான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நாஞ்சில் விஜயன் பெரும்பாலும் பல நிகழ்ச்சிகளிலும் பெண் வேடங்களில் காமெடி செய்து பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். இப்போது கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் அந்த மாதிரி தான் பெண் வேடமிட்டு கலந்து கொண்டிருக்கிறார்.

வெளியேறிய நாஞ்சில் விஜயன்
இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பெண் வேடமிட்டு இருக்கும் நாஞ்சில் விஜயன் ஒரு சேரில் உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது சக நடிகராக இருக்கும் வினோத் சேரை பின்னாடி இழுத்து விடுகிறார். இதனால் கடுப்பான அவர் நான் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று சொல்லி கோபமாக எழுந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார். ஸ்கிரிப்ட் படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் எதற்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று கோபத்தோடு கத்திக் கொண்டே நாஞ்சில் விஜயன் வெளியே செல்கிறார்.

சமாதானம் எடுபடவில்லை
நாஞ்சில் விஜயனை அங்கு இருக்கும் அறந்தாங்கி நிஷா, பாலா போன்றோர் தடுக்க முயற்சி செய்கின்றனர். பாலா நாஞ்சில் விஜயனின் பின்னாடியே அண்ணே நாஞ்சில் அண்ணே என்று கூறியபடியே ஓடி வர அதற்கு நாஞ்சில் விஜயன் நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன்ல. நான் சொல்ல சொல்ல கேட்காம ஸ்டேஜ்ல உட்கார்ந்து என்னை தள்ளிவிட்டு விளையாடுறான் என்று கோபத்தோடு பேசிக்கொண்டு போகிறார். இந்த பரபரப்பான பிரமோ தற்போது வைரலாகி வருகிறது.

இது உண்மைதானா
இந்த வாரம் 1947 படத்தின் ப்ரோமோஷனலுக்காக கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றனர். இந்த வாரம் நாஞ்சில் விஜயன் மற்றும் குழுவினர் ஒரு காமெடி ஸ்கிரிப்ட் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அப்போது நடந்த பிரச்சனையால் நாஞ்சில் விஜயன் இயக்குனரிடம் சண்டை போடுகிறார். ப்ராங்காக இருக்க கூடும் என்று பலரும் கமாண்ட் தெரிவித்து வருகின்றனர் .ஆனாலும் உண்மை என்ன என்பது இந்த வார எபிசோடில் தெரிந்துவிடும்.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications