Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது BMW காரில் குழந்தைகளை கூட்டிட்டு போன காரணமே இதுதான்.. அம்மாவின் ஏக்கம்! KPY தங்கதுரை நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த தங்கதுரை சமீபத்தில் தான் புதியதாக வாங்கிய விலை உயர்ந்த பிஎம் டபிள்யூ காரில் ஏழை குழந்தைகளை கூட்டிட்டு போய் அவர்களுக்கு தேவையான சாப்பாடு, புது துணி, நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை வாங்கி கொடுத்திருந்தார். இது எதற்காக அவர் செய்தார் என்று சமீபத்தில் நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.

ஒரு சிலர் ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டங்களையும் அவமானங்களையும் பட்டிருந்தாலும் தங்களுடைய உழைப்பு மற்றும் விடாமுயற்சி காரணமாக போராடி வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் கேபிஒய் தங்கதுரை. இவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் காமெடி கேரக்டரில் கலந்து கொண்டு இப்போது பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Television Vijay TV

அதிகமான திரைப்படங்கள் மற்றும் சீரியல் நிகழ்ச்சிகள் என்று இவர் பிஸியாக இருந்தாலும் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி அதில் ஏழை குழந்தைகள் ஒரு சிலரை கூட்டிட்டு போய் அவர்களுக்கு தேவைப்பட்ட பொருள்களை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்ததும் அவரை பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் எதற்காக தான் ஏழை குழந்தைகளை காரில் கூட்டிட்டு போனேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் என்னோட சின்ன வயசுல எனக்கு இருந்த ஏக்கங்கள் தான் இப்போது இந்த குழந்தைகள் மூலமாக நான் நிறைவேற்றி இருக்கிறேன். என்னுடைய அப்பா கூலி தொழில் நான் பார்த்து வந்தாங்க. அவருடைய ஒரு வருமானத்தில் தான் எங்கள் வீட்டில் என்னோடு பிறந்த அஞ்சு பேர் மற்றும் எங்களுடைய குடும்பமே வாழ்ந்து வந்தோம். அந்த நேரத்தில் எல்லாம் எங்கள் வீட்டில் டிவி, பைக் என எந்த பொருளும் கிடையாது.

Television Vijay TV

டிவி பார்க்க பக்கத்து வீட்டிற்கு தான் போயிருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு வறுமையான சூழல் இருந்தாலும் படிப்பில் எல்லோருமே எங்க வீட்டில் கெட்டிக்காரராக இருந்தோம். அப்போ எல்லாம் எங்க அம்மா, அப்பா எங்க போனாலும் நடந்து தான் போவாங்க. நாங்களும் அப்படித்தான் காலேஜ், ஸ்கூலுக்கு எல்லாம் பஸ்ஸில் போய் படிச்சோம். பஸ்ஸை மிஸ் பண்ணிட்டா அடுத்த பஸ் வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருப்போம். அதற்கு பிறகு பல கஷ்டங்களை பட்டு பல்வேறு வேலைகளில் இருந்து இப்போ புதுசா பிஎம்டபிள்யூ கார் வாங்குற அளவிற்கு வசதி வந்திருக்கு.

அதனாலதான் நான் புதுசா கார் வாங்கியதும் என்னை போல ஏக்கத்தோடு இருக்கும் குழந்தைகளுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது குறித்து லோகநாயகி என்ற சமூக ஆர்வலர் ஒருவரிடம் நான் பேசினேன். அவர் என்னை வியாசர்பாடிக்கு என்னை கூட்டிட்டு போனாங்க. அங்கு என்னுடைய காரை பார்த்ததும் அங்கிருந்து குழந்தைகள் ரொம்பவும் சந்தோஷம் அடைஞ்சிட்டாங்க.

Television Vijay TV

அவங்களுக்கு காரில் போறதெல்லாம் பெரும் கனவு அந்த குழந்தைகள் சந்தோஷத்தை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு ஆனந்தமாய் இருந்தது. நான் கார் வாங்கியதற்கான முழு பயனை அடைந்ததாக அன்று நான் உணர்ந்தேன். இதே சந்தோஷம் எனக்கு 2015ல் கிடைத்தது. அப்போதுதான் நான் முதல் முதலா ஷிப்ட் கார் வாங்கினேன். அந்த நேரத்தில் எங்க அம்மாவை உட்கார வைத்து ஆசையா ஓட்டி காட்டுனேன்.

இப்போ பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருக்கிறேன்.. ஆனா உக்காந்து பார்க்க எங்க அம்மா உயிரோட இல்ல. அதுதான் பெரிய குறையா இருக்கு.. அந்த குறைக்கு இந்த குழந்தைகளை வச்சு சென்னையை சுற்றி காட்டுனதுனால போயிடுச்சு என்று தங்கதுரை நெகழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+