"திருமதி செல்வம்” சீரியலில் நடித்த கே.ஆர் விஜயாவின் தங்கை.. அஜித்,விஜய்க்கும் அம்மா! தற்போதைய நிலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் நடிகை கே.ஆர் விஜயாவின் தங்கையான கே.ஆர் வத்சலா சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.

சின்னத்திரையில் ஹிட்டான திருமதி செல்வம், தென்றல் போன்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.

அதுபோல நடிகர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் பல வருடம் கழித்து தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

KR Vijay Sister Actress KR Vatsala who acted in Thirumati Selvam serial current status

எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக பலருக்கும் பச்சையமான கே.ஆர் விஜயா தற்போது கூட நடிகர் சூர்யாவோடு ஆதவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரைப் போலவே அவருடைய தங்கையான கே ஆர் வத்சலா பல திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருப்பது பலருக்கும் தெரியாதது தான்.

கே.ஆர் விஜயா சிறு வயதிலேயே கதாநாயகியாக மாறியது போல எல்லாம் கே ஆர் வத்சலாவுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லையாம். அவர் திருமணத்திற்கு பிறகு 28 வயசுக்கு மேலே தான் நடிக்க வந்து இருக்கிறார். கே.ஆர் விஜயா சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் பெரிய சவால்களை எல்லாம் அவர் சந்திக்க வேண்டியது இருந்ததாம். அதனால் தன்னுடைய சகோதரிகளிடம் அவர் நடிக்க வேண்டும் என்று ஆசையை காட்டாமல் இருந்திருக்கிறார்.

ஆனாலும் கே.ஆர் வத்சலா நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது அவர் மறுக்க ஒன்றும் செய்யவில்லையாம். ஆரம்பத்தில் சினிமாவில் 28 வயதுக்கு மேலே நம்ம நடிக்க போறோமே நம்மை என்னவெல்லாம் கேலி செய்வார்களோ என்று பயந்தபடியே தான் நான் வந்தேன் ஆனால் சினிமாவுக்குள் நுழைந்த பிறகு கிட்டத்தட்ட 350 க்கு படங்கள் நடித்திருக்கிறேன் என்று பெருமையாக வத்சலா கூறி இருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில் இவர் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் முதன்முதலாக இவருக்கு வள்ளி திரைப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அப்போ எப்படி இவ்வளவு சீக்கிரமா அம்மாவாக நடிக்க என்று தயங்கி அந்த வாய்ப்பை வேண்டாம் என்று விட்டுவிட்டாராம். பிறகு இவரும் இவருடைய பிரண்டும் ரஜினியை சந்திக்க போயிருக்கின்றனர்.

அப்போது ரஜினி இவரிடம் என்னம்மா நீங்க உங்களுக்கு தந்த வாய்ப்பை நடிக்கல என்று கேட்க? இனி ஒரு வாய்ப்பு தாங்க என்று இவர் வற்புறுத்தி கேட்டதால்தான் இவருக்கு "அருணாச்சலம்" திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த திரைப்படத்தில் நடித்ததை மறக்க முடியாது. அதுபோல எங்க வீட்டில ஒரு குழந்தையா நினைச்ச சௌந்தர்யாவின் மறைவு என்னை ரொம்பவே பாதித்த விஷயம் என்றும் அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

அதோடு நான் அஜித், விஜய் ரெண்டு பேருடனும் நடிச்சி இருக்கிறேன் என்று கூறிய அவர் நடிகர் விஜய்யோடு நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் அனுபவம் குறித்தும் பேசி இருக்கிறார். அதில் சூட்டிங் ஸ்பாட்ல விஜய் ரொம்பவே அமைதியா இருப்பாரு. ஆனா அஜித் ரொம்பவே பேசுவாரு. அஜித்துக்கு என்னுடைய மகன் சாயல் இருக்கிறதால அவர் நடிக்கும் போது நான் பாத்துக்கிட்டே இருப்பேன்." ரெட்" படத்தில் அவரோடு நடிச்சது எனக்கு நல்ல ரீச் கொடுத்துச்சு என்றும் கூறியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாம "தீனா" படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது என் பொண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆகிட்டு. அதனால அந்த படத்துல நடிக்க முடியாம போயிட்டு என்று கூறியவர், சின்னத்திரை சீரியலில் தன்னுடைய அனுபவம் குறித்தும் கூறி இருக்கிறார். அதில்
எனக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது என்றால் அது "திருமதி செல்வம்" தான். அந்த சீரியல் பண்ணிட்டு இருக்கும்போது என்னோட கல்யாண வாழ்க்கையில் பிரிவு வந்ததால் அதில் கவனம் செலுத்தி என்னால நடிக்க முடியல அதனால அதிலிருந்து விலகிட்டேன்.

KR Vijay Sister Actress KR Vatsala who acted in Thirumati Selvam serial current status

அதைத்தொடர்ந்து எனக்கு "தென்றல்" சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் எனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது. இப்போது பலர் தென்றல் சீரியலில் என்னுடைய கேரக்டர் "திலகா" என்கிறதால அதை சொல்லியே கூப்பிடுறாங்க என்று கூறியவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் அம்மாவாக விசாலாட்சி கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யபிரியாவிற்கு நெருங்கிய தோழியாம்.

சின்னத்திரை சினிமாவில் இருந்து விலகிய வத்சலா தன்னுடைய குழந்தைகளோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். ஆனால் சமீபத்தில் தான் சென்னைக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் நடிகை சத்யபிரியாவோடு வெளியிடங்களுக்கு சென்று மகிழ்ந்திருக்கிறார். குறிப்பாக லேட்டஸ்ட்டாக அவர் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் தங்களுடைய மலரும் நினைவுகள் குறித்தும் பகிர்ந்து இரக்கின்றனர். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+