இதயத்தில் குத்தாதீங்க.. எங்களுக்கு வலிக்கும்ல.. உருகிப் போன கிருத்திகா அண்ணாமலை!
சென்னை: நடிகை கிருத்திகா அண்ணாமலை போட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது.
மெட்டி ஒலி உள்ளிட்ட பல புகழ் பெற்ற தொடர்களில் கலக்கலான நடிப்பைக் கொடுத்தவர் தான் கிருத்திகா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
ஆரம்பத்தில் வில்லத்தனமான ரோல்களில் நடித்த இவர் பின்னர் பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கி வருகிறார்.

களையான அழகுடையவர்
சின்னத்திரையில் எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக அறிமுகமானாலும் இப்பமும் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் கிருத்திகா அண்ணாமலையிடம் யாராலும் நெருங்க முடியாத உயரத்தால் மட்டுமல்லாமல் திறமையிலும் நடிப்பிலும் உயர்ந்தவர். பல வருடங்களாக சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களை பார்த்ததும் உருகிப் போன ரசிகர்கள் இவருக்காக கமெண்டுகளை இன்ஸ்டாகிராமில் நிறைத்து வருகின்றனர் .

நெகட்டிவ்
சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் கதாநாயகியும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் வில்லிகளையும் யாராலயும் சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .ஆனால் இரண்டு கேரக்டரையும் ஒருவரே நடித்தால் எப்படி இருக்கும்.. ரசிகர்கள் மறப்பார்களா என்ன.. அந்த மாதிரிதான் எனக்கு வில்லி கேரக்டரில் அத்துப்படி பாசிட்டிவ் கேரக்டர் என்றாலும் நமக்கு அல்வா தான் என கேரக்டருக்கு தகுந்த மாதிரி கேரக்டராகவே மாறிவிடுகிறார் கிருத்திகா.

பிடித்த முகம்
இதனால்தான் சீரியல் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த முகம் தான் .இவருடைய பெயரைச் சொன்னதுமே டக்கென்று ஞாபகத்திற்கு வருவது மெட்டி ஒலி சீரியல் தான் .முதல் சீரியலில் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் அமர்ந்து விட்டார். அதற்குப் பிறகு பல்வேறு சீரியல்களில் வில்லியாகவும் குணச்சித்திர வேடத்திலும் கலக்கியிருக்கிறார் .என்ன வேடம் கொடுத்தாலும் பிரமாதமாக நடிப்பவர் என்ற பெயர் இவர்க்கு உண்டு.

எல்லா சீரியலிலும்
பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இவர் நடித்து வந்துள்ளார். பார்ப்பதற்கு கொஞ்சம் கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பது இவரின் அழகு .மேலும் கீர்த்தியின் புன்னகை பலரையும் கவர்ந்து இழுத்து வருகிறது .பலருக்கும் வயது ஆக ஆக இளமை குறைந்து கொண்டே வரும் .ஆனால் இவருக்கு மட்டும் வயது உயர உயர இளமையும் உயர்ந்து கொண்டே போகிறது .அது இவருடைய தனி சிறப்பாக இருந்து வருகிறது .

எடுப்பான அழகு
சுமார் 85 கிலோவிற்கு மேலே சென்ற இவர் தற்போது உடல் எடையை குறைத்து இளம் கதாநாயகிகளுக்கு சவால் விட்டு வருகிறார் . இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல் உடையில் நெஞ்சோரத்தில் கைகளை இறுக்கமாக வைத்து மூடி க்யூட்டான எக்ஸ்பிரஷனை காட்டியிருக்கிறார் .இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இண்டஸ்ட்ரி உங்கள ரொம்ப மிஸ் பண்ணிருச்சி .

செம அழகு
செம அழகு ,அந்த சிரிப்பு இருக்கே...என ஆளாளுக்கு அவரை வர்ணித்து வருகின்றனர் .ஆனால் இவர் என்ன வில்லத்தனம் செய்தாலும் இவருக்கு பாசிட்டிவ் கமெண்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஆடுகிறான் கண்ணன் ,முந்தானை முடிச்சு ,கணவருக்காக ,வம்சம், செல்லமே ,கண்மணி ,சின்னத்தம்பி என்று கிருத்திகா நடித்த சீரியல் பெயர்கள் நீண்டுகொண்டே போகிறது .நிறைய வில்லி கேரக்டருக்கு இடையே ரம்யா கிருஷ்ணனுடன் வம்சம் சீரியலில் பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார் .

பாண்டவர் இல்ல வில்லி
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் வில்லியாக அறிமுகமாகி தற்போது பாசத்தை பிழியும் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் .நல்ல உயரத்துடனும் கம்பீரமாக இருப்பதால் இவருக்கு வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறதாம்.

இப்ப ஓகே
இவர் ஸ்கூல் காலேஜ் எல்லாமே பெண்கள் உடனே படித்து வந்த இவருக்கு ஆண்களுடன் நடிப்பதில் முதலில் சிரமமாக இருந்துள்ளது .ஆனால் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ஆண்கள் மட்டுமே இருக்கும் குடும்பத்தில் பெண்கள் ஒவ்வொருவராக எப்படி நுழைகிறார்கள் என்பது தான் கதை .அதில் ரேவதி என்ற மருமகள் கேரக்டரில் நடித்து வருகிறார் .இந்த சீரியலில் முதலில் இவரை பார்த்து கழுவி ஊற்றிய ரசிகர்கள் தான் தற்போது இவருடைய மனமாற்றத்தை பார்த்து இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

குட்டிப் பையன் இருக்கான்
.இவருக்கு திருமணம் முடிந்து ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்னும் செய்தியை கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் தனக்குப் பிடித்த ஆட்டத்தை போட்டு அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வரும் இவரின் போட்டோஸ் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது .இந்த போட்டோவிருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும்கமெண்ட் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications