சிரிச்சா தப்பா? ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்க வந்த ஹீரோ.. பிரபல நடிகர் பற்றி கே.எஸ் ரவிக்குமார் ஓப்பன்
சென்னை: முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வரும் கே.எஸ் ரவிக்குமார் தெலுங்கு, இந்தி சினிமாக்களை இயக்கி இருக்கும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன பாலையாவோடு இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கார்டியன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.எஸ் ரவிக்குமார், பாலையாவின் திரைப்படத்தை தான் இயக்கும் போது ஏற்பட்ட சங்கடம் குறித்து அதில் பேசியிருக்கிறார்.

அந்த வகையில் தெலுங்கில் நடிகர் பாலையா குறித்த செய்திகள் அடிக்கடி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்திவிடும். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது நடிகை விசித்திரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசி இருந்தபோது அது பாலையா தான் என்று பலரும் அவர் குறித்து பேசி வந்தனர். அதைத்தொடர்ந்து இப்போது பாலையா பற்றி வெளிப்படையாகவே இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பேசியிருக்கிறார்.
அதில் பாலையாவிற்கு செட்டில் யாராவது சிரிப்பது பார்த்தாலே எதுக்கு இவங்க சிரிக்கிறாங்க என்று கோபப்பட்டு விடுவார். அப்படித்தான் ஒருமுறை என்னுடைய உதவியாளர் சரவணன் பாலையாவிடம் மாட்டிக்கொண்டார். ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது பாலையா அங்கிருந்து மக்களை பார்த்து வேகமாக திரும்பி இருக்கிறார். அப்போது அவர் தலையில் மாட்டி இருந்த விக் லேசாக விலகி இருக்கிறது.

அதை பார்த்த சரவணன் சிரித்துவிட, பாலையா அவரைப் பார்த்து எதுக்கு சிரிச்ச என்று கோபப்பட்டு கேட்டார். அப்போது நான் அவர் வேறு யாரும் இல்லை. என்னுடைய உதவியாளர் தான் என்று சொன்னாலும் அவர் அதைக் கேட்காமல், இவர் என்னுடைய எதிரி கேங் என்று சொல்லி அடிக்க வந்து விட்டார். அப்புறம் ஒரு வழியாக நான் சரவணனை பாலையாவிடமிருந்து காப்பாற்றினேன்.
அவரிடம் மாட்டிக் கொண்டு சரவணன் அப்போ அடிவாங்காமல் தப்பித்து விட்டார். பாலையா பழகுவதற்கு இனிமையானவர்... நல்ல மனிதர். ஆனால் எதிலும் ஒருவிதமான சந்தேகத்தோடு இருப்பார் என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார். அதுபோல கேஸ் ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்கள் அதிகமான குடும்ப பாங்காகவும் காமெடியாகவும் இருப்பதாலே மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது.

இவருடைய திரைப்படத்திற்கு என்று ஒரு கூட்டம் காத்திருக்கின்றனர். ஆனால் கே எஸ் ரவிக்கு ரவிக்குமார் முன்பு மாதிரி இப்போது அதிகமான திரைப்படங்களை இயக்குவது இல்லை. நடிகராக மட்டுமல்லாமல் இப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் நடுவராக வந்து கொண்டிருக்கிறார் விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த அடுத்த கதாநாயகி யார் என்ற நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் இப்போது பாலையா குறித்து கே எஸ் ரவிக்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications