4 நாள் தான்! சேரன் பாண்டியன் படத்தை பார்த்து சரத்குமார் அழுதுட்டாரு! கே.எஸ் ரவிக்குமார் ஓப்பன் அப்
சென்னை: இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சரத்குமார் தான் இயக்கிய "சேரன் பாண்டியன்" திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வெளியான போது தியேட்டரில் சரத்குமார் அழுதது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த பேட்டி இணையதில் வைரலாகி வருகிறது.
90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்கள் பலவற்றை கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கியிருப்பார். அதிலும் கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதிலும் சரத்குமார் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இருவருடைய கூட்டணியில் முதன் முதலில் உருவான படம் தான் சேரன் பாண்டியன்.

அந்த சேரன் பாண்டியன் திரைப்பட அனுபவம் குறித்து சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார் வர்ற சீனை மட்டும் நான் முதலில் சூட் செய்தேன். ஒரு பாட்டுக்காக சூட்டிங் அரை நாள் நடந்தது. பிறகு சூட்டிங் எடுத்ததும் அவரை அனுப்பி வைத்து விடுவேன். அந்த படத்திற்கு கிளைமாக்ஸ் உட்பட மொத்த சூட்டிங் 5, 6 நாளில் எடுத்து முடிச்சிட்டேன்.
ஆனால் சரத்குமார் டே நைட் ஒர்க் பண்ணுவாரு. அதனால அவருக்கு நாம என்ன ஒர்க் பண்ணனும்னு தெரியாது. காரணம் சரத்குமார் அந்த நேரத்தில் பவித்ரன் ஷூட்டிங்கில் இருந்தார். அது ஊட்டியில் நடைபெற்றது. அங்கு காலையில் 7:00 மணிக்கு இருந்து மாலை ஆறு மணி வரைக்கும் ஷூட்டிங் நடக்கும். அதற்கு பிறகு அங்கிருந்து அவரே காரை ஓட்டிட்டு கோவை செம்மட்டுக்கு வந்துடுவாரு. அங்க தான் இப்போ ஈஷா யோகா மையம் இருக்கு.
அந்த இடத்தில் இரவு 9 மணிக்கு இவரோட ஷார்ட் எல்லாம் எடுத்து காலை 3 மணிக்கு இவரை அனுப்பி வச்சிடுவேன். சரத்குமார் மறுபடியும் ஊட்டிக்கு போய் காலை 7:00 மணிக்கு ஷாட்டுக்கு ரெடி ஆகணும். அப்படி தூங்காமல் அந்த நேரத்தில் வேலை பார்த்தாரு. என்கிட்டயும் சேரன் பாண்டியன் படம் நடிக்கணும், ஊட்டியிலும் பவித்ரன் படம் சூட்டிங் போகணும் அதற்காக சரத்குமார் ரொம்பவே கஷ்டப்பட்டார்.
பவித்ரன் திரைப்படத்தில் குஞ்சுமோன் தயாரிப்பாளர் அவரிடமும் ஏற்கனவே படத்துககு ஒப்புதல் கொடுத்து விட்ட நிலையில் அதையும் விட முடியாத சூழ்நிலை இருந்ததால் இரண்டிற்கும் மாறி மாறி சரத்குமார் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு தான் என்ன நடித்தோம் என்றே தெரியாது. ஆனால் சேரன் பாண்டியன் படம் போர் பிரேம்ஸ் தியேட்டர்ல போட்டாச்சு. எல்லாரும் படம் முடிச்சிட்டு போறாங்க அப்போ சரத்குமார் மட்டும் தேம்பித் தேம்பி அழுகிறாரு.
பால்கனியில் நின்னு அழுதுட்டே இருக்கிறாரு. அந்த பக்கமா யாரு போனாலும் அவங்களை கட்டிப்பிடித்து அழுதுட்டு இருக்காரு. அந்த நேரத்தில் சரத்குமாரின் மனைவி வந்து அவரை தேற்றி விட்டாங்க. என்னங்க இப்படி அழுறீங்க என்ற கேட்கும்போது நான் நாலு நாள் தான் நடித்து இருக்கிறேன். ஆனால் நான் இவ்ளோ நடிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது.
என்னை வந்து இந்த படத்துல ஹீரோவா ஆகிட்டீங்க.. நான் இவ்ளோ சீனு நடிச்சு இருக்கேன்னு எனக்கு தெரியல. என்னை அப்படி காட்டி இருக்கீங்க என்று கண் கலங்க பேசிக் கொண்டிருந்தார். இப்ப கூட எனக்கு சேரன் பாண்டியன் படத்தை பற்றி பேசினால் அன்னைக்கு தியேட்டரில் சரத்குமார் அழுதுட்டு நின்னது தான் ஞாபகத்துக்கு வருது என்று அந்த பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
