பிரபலங்கள் வீட்டு பிரச்சனைக்கும் தனுஷ் காரணமா? 3.02 நிமிஷத்துக்கு குபேரா-வில் என்ன இருக்கு: பிரபலம்
சென்னை: பிரபல தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் குபேரா.. இதில், முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சார் படத்துக்கு பிறகு தனுஷின் 2வது தெலுங்கு படமாக இது உருவாகியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
Behind Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "தன்னுடைய படம் வெளிவருதற்கு முன்பு, ரஜினி இப்படித்தான் ஆடியோலான்சில் ஏதாவது சர்ச்சையாக பேசிவிடுவார்.. அதேபோல விஜய்யும் ஆடியோ லான்ச்சில் பரபரப்பாக பேசுவார். அதேரூட்டில்தான் தனுஷூம் இப்போது வருவதாக நினைக்கிறேன்.

சமீபத்தில் நடந்த குபேரா படவிழாவில், ஒரு செங்கல்லைகூட உருவ முடியாது என்று பேசியிருந்தார். அவர் இவ்வாறு பேசியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
ஒருகாலத்தில் தனுஷ் சில வேண்டாத விஷயங்களை செய்து, சிக்கல்களிலும் பிரச்சனைகளிலும் சிக்கியது உண்மைதான்.. சர்ச்சைகளும் சிக்கினார்.. ஆனால், இப்போது அப்படியில்லை.. தானுண்டு தன் தொழிலுண்டு என்று இருந்து வருகிறார். ஆனாலும் தப்பாவே தனுஷை பேசுகிறார்கள்.
பிரபலங்கள் வீட்டில் பிரச்சனை
பிரபல நடிகர், நடிகைகள் வீட்டில் பிரச்சனை என்றாலும் தனுஷ்தான் காரணம், வேற எந்த பிரபலங்கள் வீட்டில் எந்த பிரச்சனை என்றாலும் தனுஷ்தான் காரணம் என்று சொல்ல துவங்கிவிட்டார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் தனுஷூக்கு வருத்தத்தையும், கோபத்தையும் உண்டுபண்ணி, குபேரன் பட ஆடியோ லான்ச்சில் வெளிப்படுத்தியிருக்கலாம்.
அதேபோல நயன்தாராவைதான் அவ்வாறு தனுஷ், அட்டாக் செய்து பேசியதாகவும் சொல்கிறார்கள்.. அந்த அளவுக்கு இதை எடுத்துக் கொள்ள வேண்டும். புரமோஷன் மேடையில், ரஜினி, விஜய் போல ஏதாவது பேச நினைத்திருக்கலாம். ஆனால், இதெல்லாம் தேவையில்லாத வேலை.
குபேரன் படத்தை பொறுத்தவரை நாகார்ஜூனாவின் படம் என்கிறார்கள்.. அதில் தனுஷ் நடித்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.. அதனால்தான், தெலுங்கில் முதலில் எடுத்துவிட்டு, பிறகு தமிழில் ரிலீஸ் செய்கிறார்கள் என்ற பேச்சு உள்ளது.. எனினும் தமிழகத்தில் இது தனுஷ் படமாகவே பார்க்கப்படுகிறது..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications