Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kumapatti : இவங்க எல்லாம் தலைவரே இல்ல! பாகிஸ்தானுக்கு இரக்கம் காட்டக்கூடாது! கூமாம்பட்டி தங்கபாண்டி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிலீஸ் வீடியோக்கள் மூலமாக மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் கூமாபட்டி தங்கபாண்டி தன்னுடைய கிராமத்தை பெருமைப்படுத்தி பேசி ஏங்க... என்று வீடியோ வெளியிட்டே இப்போ ஒரு பிரபலமாக மாறி கலக்கிட்டு வராரு. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியிலும் கலந்துக்கிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்குள் இருக்கும் நாட்டுப்பற்றை பற்றி பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Kumapatti Thangapandi zee tamil

கூமாபட்டி தங்கபாண்டி பேசும்போது, ஜாதியை பற்றி பேசுபவர் மதத்தை பற்றி பேசுபவர்களை எனக்கு சுத்தமா பிடிக்காது. ஒருத்தன் ஜாதியை அடையாளப்படுத்துகிறான், என் ஜாதி பெருசுன்னு சொல்கிறான் என்றால் அவனை எல்லாருமே புறக்கணிக்க வேண்டும் என்று ஆதங்கத்தோடு பேசிய தங்கப்பாண்டி தேசத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தன்னுடைய கருத்தையும் எடுத்து வைத்திருக்கிறார்.

தான் ஸ்கூல் படிக்கும் போது யாரெல்லாம் தேசத்திற்காக உழைத்தார்கள் என்று மார்பை நிமித்தி பேசினேனா இப்போது அவர்களை தல குனிந்து, கை கூப்பி வணங்க மாட்டேன் இவர்தான் தேசத்தில் ஆணிவேர் என்று சொல்வீர்களே அவர்களை துளி அளவும் வணங்க மாட்டேன். இனிமேல் இவர்களை வணங்க கூடாது இவர்களை பற்றி பேசவும் கூடாது, எதிர்காலத்தில் இவர்களுடைய கல்லறைகள் கூட இந்தியாவில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டேன்.

உண்மையிலேயே பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த நபர்களை இன்று தூக்கி வைத்து கொண்டாடுகிறார். உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை நேருக்கு நேர் எதிர்த்தவர்களை மதிக்க தவறிவிட்டோம். உண்மையில் மாவீரன் யார் என்று எனக்கே தெரியவில்லை. அதிகமாக புக் படித்து பல விஷயங்களையும் தெரிந்த பிறகுதான் எனக்குள் மாற்றமே ஏற்பட்டது. இப்போ இங்கே இருக்கிறவங்க காசிக்கு போகிறாங்க. அங்கே இருப்பவங்க ராமேஸ்வரம் வர்றாங்க. இவங்களுடைய கலாச்சார ஒற்றுமை பார்க்கும்போது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. எல்லோருக்குள்ளும் ஒற்றுமை இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நாடு இந்த அளவிற்கு பலவீனமாக ஆனதற்கு காரணம் நமக்குள்ள ஒற்றுமை இல்லை.

கலாச்சார ரீதியாக ஒற்றுமை இருந்தது ஆனால் அரசியல் ரீதியாக ஒற்றுமை இல்லை என்று தன்னுடைய வருத்தத்தை சொல்லிவிட்டு டெல்லியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி பேசும் போது, என்னை பொருத்தவரை திட்டமிட்டு நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள். டாக்டர் என்பவன் மனித உயிர்களை காப்பாற்றக்கூடிய கடவுள் அவனே மனிதாபிமானம் இல்லாமல் மனித உயிர்களை கொல்வதற்கு இவ்வளவு வக்கிரத்தில் இறங்கி விட்டான் என்றால் அவனது சிந்தனை எப்படி இருந்திருக்கும் பாருங்கள் என்று பேசும்போதே ஆக்ரோஷமானார் தங்கபாண்டி.

ஐநா சபையில் இவர்களால் எங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று, நாம இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்தால் சீனா அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த பக்கம் பார்த்தால் பாகிஸ்தான் ஓரத்தில் அந்த பக்கம் பார்த்தால் பங்களாதேஷ், கீழே பார்த்தால் இலங்கை நம் நாட்டை சுற்றி இவ்வளவு பேர் எதிர்ப்பாக இருக்கும்போது நாம் தேசத்தை நாம் முன்னிலைப்படுத்த வேண்டும்.

பாகிஸ்தானுக்கு ஈவு இரக்கமே காட்டக்கூடாது ஜாதி கலவரம் என்றால் பயங்கரமாக வைரலாகிறது , அதேபோலமதம் கலவரம் பயங்கரமா பரவுகிறது. ஆனால் தேசத்தின் எல்லையில் ராணுவ வீரன் இறந்துவிட்டால் அந்த அளவிற்கு தாக்கம் வரல. நான்லாஜிக் கலாச்சாரம் எப்படி இருக்கிறது என்று படிச்சிருக்கேன், ஹிட்லரை பற்றியும் படிச்சிருக்கிறேன். ஜோசப் ஸ்டான்லி பற்றியும் படித்திருக்கிறேன். அவங்க எல்லாம் தேசியத்தை முன்னிலைப்படுத்துறாங்க ஜோசப் ஸ்டான்லியிடம் போய் தேசத்தை தவிர வேற எதை பற்றி பேசினாலும் வேலை செய்யாது. அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்தால் பலகீழமான நாடுகள் கூட பலமாக மாறும். ஏங்க இங்க பாருங்க என்று நான் ரீல்ஸ் போடுற தங்கபாண்டி வேற, என் மனசுக்குள்ள எப்போதும் இந்த நாட்டை சிந்திக்கிற ஒரு தங்கப்பாண்டி தான் இருந்துகிட்டு இருக்கிறான் என்று கூமாம்பட்டி தங்கப்பாண்டி ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+