கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு யார் விட்ட சாபமோ! சிங்கிள் பசங்கவில் இருந்து விலகுகிறாரா? முடிவு இதுதானாம்!
சென்னை: "ஏங்க... ஏங்க..." என இணைய உலகையே தனது தனித்துவமான பேச்சால் திரும்பிப் பார்க்க வைத்த கூமாபட்டி தங்கபாண்டி, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலக்கி வருகிறார். மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடல் வலியோடு, மன வேதனையும் அடைந்த அவர், தனது போராட்டத்தைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

கூமாபட்டியை ட்ரெண்ட் ஆக்கிய தங்கபாண்டி
கூமாபட்டி தங்கபாண்டி, ஒரு சாதாரண கிராமப்புற இளைஞர். தனது இயல்பான பேச்சு, நகைச்சுவை உணர்வு மற்றும் உடல்மொழி மூலம், சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானார். குறிப்பாக, அவரது ஏங்க... ஏங்க... என்ற பேச்சு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் விளைவாக, அவர் ஜீ தமிழில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கூமாப்பட்டி தங்கபாண்டியாக இணைந்து, நடிகை சாந்தினி பிரகாஷுடன் நடனமாடி வருகிறார். மேலும், தனது சொந்தக் கிராமமான கூமாபட்டிக்கு அரசின் மூலம் ரூ. 10 கோடி நிதி பெற்றுக் கொடுத்தவர் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். தற்போது, அவர் சினிமா வாய்ப்புகளுக்காகத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
மன உளைச்சலில் தங்கபாண்டி
சமீபத்தில் ஒரு படப்பிடிப்புக்காகப் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இது பற்றி அவர் பேசும்போது "என்னுடைய தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர், பந்துகிண்ண மூட்டு இறங்கியிருக்கு, ஜவ்வு கிழிஞ்சிருக்கு, ஆபரேஷன் செய்ய வேண்டும். மூன்று வாரம் ஓய்வுக்குப் பிறகு மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். நான் வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஆனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
விபத்து ஒருபுறம் இருக்க, பேருந்து ஓட்டுநரின் அணுகுமுறை அவருக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. "ஓட்டுநரிடம், ஏண்ணே இவ்ளோ ஸ்பீடா போறீங்க, விபத்து ஆகிவிடப் போகுது என்று கேட்டதற்கு, அவர், வண்டி குறுக்கால வந்தது, பிரேக் போட்டேன். நீ என்ன வடக்கனா.. போ அப்படி என்று சொல்லி அசிங்கப்படுத்தினார். தெக்கனா இருந்தால் என்ன, வடக்கனா இருந்தால் என்ன? எல்லாரும் மனிதர்கள்தானே? அவர் பேசியதுதான் ரொம்ப வருத்தமாகிவிட்டது" என்று தங்கபாண்டி கூறினார்.
சாதனையை நோக்கி தங்கபாண்டி
"எனக்கு அடிப்பட்ட தகவல் கேட்டதும், என் கூட சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் ஜோடியாக இருக்கும் சாந்தினி மட்டுமில்லாமல் மொத்த டீமே வருத்தப்பட்டார்கள். ஆனால், என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதனால, சிங்கிள் பசங்க நிகழ்ச்சியிலிருந்து விலகும் எண்ணம் கிடையாது. இன்னும் மூன்று நாட்களில் வந்து பொம்மை மாதிரியாவது நிகழ்ச்சியில் நிற்பேன்" என்று தனது மன உறுதியைக் காட்டினார்.
சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை விமர்சிப்பது குறித்தும் அவர் பேசினார். "கூமாபட்டியானுக்கு வந்த வாழ்வை பாருங்க... வயித்தெரிச்சலா இருக்குடா... நீ நல்லாவே இருக்க மாட்ட என்று பலர் என்னைக் கமென்ட் செய்து திட்டுகிறார்கள். அந்த விமர்சனங்கள் எனக்கு வேதனையைத் தந்தாலும், அவற்றையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு எவ்வளவு அடிபட்டாலும் இலக்கிலிருந்து நான் பின்வாங்கவே மாட்டேன். எத்தனை எலும்பு உடைந்தாலும், ரத்த ஆறு ஓடினாலும் எனது இலக்கை நோக்கிப் பயணிப்பேன்" என்று தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications