கும்பகோணத்தில் சீரியல் நடிகையை தாக்கிய யானை.. பீரியட்ஸில் கோவிலுக்கு போனதாலா? கண்ணீரோடு கேள்வி
சென்னை: சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி தனக்கு யானையால் ஏற்பட்ட விபத்து குறித்தும் அப்போது தனக்கு நடந்த அவமானங்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு சூட்டிங் தளத்தில் யானையை தாக்கிய நிலையில் அது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் முதல் முறையாக நடிகை சந்தியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை சந்தியா பல கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஹிட்டான சந்திரலேகா, வம்சம் போன்ற பல சீரியல்களிலும் அதுபோல பிற மொழி சீரியல்களிலும் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சந்தியா ஜகர்லமுடி. அதோடு இவர் நடிகையாக மட்டுமல்லாமல் நாய்களின் மீது அதிகமான அன்பு வைத்திருக்கிறார். வீட்டிலேயே பல நாய்கள் வளர்த்து வரும் நிலையில் தெருவில் உள்ள நாய்களையும் தன்னால் முடிந்த அளவிற்கு அதற்கும் உதவி செய்து பாதுகாத்து வருகிறார்.
நடிகை சந்தியா ஜகர்லமுடிக்கு தமிழில் வம்சம் சீரியலில் தான் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் பூமிகா கேரக்டரில் மலைவாழ் பெண்ணாக நடித்திருப்பார். அவருக்கு உதவி செய்வதற்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் பல முயற்சிகளையும் எடுத்திருப்பார். அந்த நேரத்தில் இவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் தனித்துவமான பேச்சுத்திறமை பலரையும் கவர்ந்திருந்தது. குழந்தைகள் கூட பூமிகா கொண்டை என்று இவருடைய ஹேர் ஸ்டைலை ஃபாலோ செய்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் 2006 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு என்ற டைட்டில் பாடல் எடுக்கும் போது கோவிலில் உள்ள யானையோடு சூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த யானை தாக்கியதால் படுகாயம் அடைந்த சந்தியா குறித்து அந்த நேரத்தில் அதிகமான விவாதங்கள் எழுந்து வந்தது.
காரணம் யானை அந்த மாதிரி நடந்து கொள்வதற்கு காரணம் சந்தியா, பீரியட்ஸ் நேரத்தில் கோவிலுக்கு சென்று விட்டாரோ? அதனால் தான் இப்படி எல்லாம் நடந்ததோ என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து சந்தியா சமீபத்தில் பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த நிலையில் அதில் நான் யானை மிதித்து படுகாயம் அடைந்திருந்தேன். ஏழு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சில பாகங்களையும் அகற்ற வேண்டி இருந்தது.
நான் இனி பிழைப்பேனா மாட்டேனா என்ற சூழ்நிலையில் கூட அங்கு இருந்த டான்ஸர் ஒருவர் என்னிடம் என்னுடைய மார்பை பிடித்து தவறாக நடந்து கொண்டார். அந்த வேதனையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு பிறகு நான் மருத்துவமனையில் உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய தோழி எனக்கு போன் போட்டு, நீ டிவியில் செய்தி சேனல் பார் என்று சொன்னாள். நானும் பார்த்தால் என்னை வைத்து அங்கே விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் சீரியல் நடிகையை யானை தாக்கியது எதனால் என்று கேள்வி கேட்கிறார்கள்.

அதில் நிபுணர்கள் என்று சொல்பவர்கள் சிலர், "அவர் போட்டிருந்த ஸ்பிரே அந்த யானைக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது அவருடைய ஆடை அந்த யானையை கோபம் பட வைத்திருக்கலாம்" என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் நான் மாதவிடாய் காலத்தில் இருந்ததாகவும் அப்போது நான் கோவிலுக்கு போய் விட்டேன் என்று தெரிந்து கொண்ட யானை என்னை மிதித்து விட்டதாகவும் பேசி இருக்கிறார்கள். இது எனக்கு தெரிந்து நான் ரொம்பவே கஷ்டப் பட்டேன்.
இவ்வாறெல்லாம் பேசுபவர்கள் இதைப் பற்றி பாதிக்கப்பட்ட என்னிடம் கேட்டிருக்கலாம். நான் அப்போது என்ன நடந்தது என்பதை சொல்லி இருப்பேன். ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூட யாரும் இதுவரைக்கும் கேட்கவில்லை. ஆனால் என்னை வைத்து விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
" நான் மாதவிடாயில் இருந்ததை யார் தூக்கி பார்த்தது..? எதை வைத்து இப்படி பேசுகிறார்கள்? நான் சொன்னால் தானே அது உண்மை...! அப்போ யாரை காப்பாற்றுவதற்காக அந்த நிகழ்ச்சியை போட சொன்னார்கள்.? என்று கூட எனக்கு தெரியாது என்று வருத்தத்தோடு கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், ஆனால் உண்மையில் அந்த யானை என்னை ஏன் தாக்கியது என்ற காரணத்தை சொல்கிறேன். "சூட்டிங் எடுக்கும் போது என்னிடம் யானை வரும் போது காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த யானையிடம் நான் காசு கொடுத்து அது என்னை ஆசீர்வாதம் செய்யும். ஆனால் அது சரியாக வராததால் மறுபடியும் டேக் எடுக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த யானை சூட்டிங் யானை கிடையாது. கோயில் யானைக்கு அடுத்து டேக் எடுக்கும் போது முன்பு கொடுத்த அதே ரூபாயை மீண்டும் யானைக்கு கொடுக்க சொன்னார்கள்.
நானும் கொடுத்தேன். அப்படி மூன்றாவது டேக் எடுக்கும் போது மீண்டும் அதே நோட்டை கொடுத்ததால் யானைக்கு கோபம் வந்துவிட்டது. இவள் நம்மளை ஏமாற்றுகிறாள் என்று நினைத்து விட்டது. அதனால் தான் அது என்னை தாக்கியது. இதை என்னிடம் கேட்டிருக்கலாமே..? இதைக் கேட்காமலே விவாதம் ஆக்கினார்கள்.
என்னுடைய அப்பா கூட ஜர்னலிஸ்ட் தான். ஆனால் இங்கே மோசமான ஜர்னலிசம் நடந்தது. நான் அதற்கு பிறகு 2019-ல் மீண்டும் வந்த கோவிலுக்கு சென்று யானையை பார்க்க சென்றேன். தூரத்தில் நின்று பார்த்துவிட்டு வந்தேன். இப்போதும் கூட அந்த யானை மீது எனக்கு கோபமே இல்லை என்று அந்த பேட்டியில் சந்தியா ஜகார்லமுடி பேசி இருக்கிறார்.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications