உடம்பு மீது ஏறி உட்கார்ந்த அபிராமி.. துடித்த ஜீவன்.. இரவெல்லாம் தூங்காமல் தவித்த குன்றத்தூர் அபிராமி
சென்னை: குன்றத்தூர் அபிராமி, தனக்கு என்ன தீர்ப்பு வரப்போகிறது என்ற கவலையில் நேற்று முன்தினம் இரவெல்லாம் தூங்காமல் இருந்தாராம்.. ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்ததால், எப்படியும் தனக்கு கருணை கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் இருந்தாராம்... கருப்பு கலர் சுடிதாரில், முகத்தை துப்பட்டாவால் மூடியபடி நேற்று கோர்ட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லையாம்.
குழந்தைகளை கொன்ற வழக்கில் 7 வருடங்களுக்கு முன்பு கைதாகி சிறையிலடைக்கப்பட்ட அபிராமி, ஆரம்பத்தில் ஜெயிலில் யாருடனும் பேசாமல் இருந்தாராம்.. நிறைய மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு, உடல்நலமும் பாதிக்கப்பட்டதாம்.. எனினும், சிறையிலேயே அவருக்கு கவுன்சலிங் தரப்பட்டுள்ளது. இதற்கு பிறகே அபிராமி இயல்பு நிலைமைக்கு வந்துள்ளார்.

சிறையில் அழுத அபிராமி
ஒவ்வொரு முறை விசாரணைக்காக கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் முகம் முழுக்க சோகம் அப்பிக் கிடக்குமாம்.. நேற்று முன்தினம் இரவுகூட, என்ன தீர்ப்பு கிடைக்கும்? என்று சக கைதிகளிடம் கேட்டுக் கொண்டேயிருந்தாராம்.. சரியாக தூங்கவும் இல்லையாம்..
பிறகுதான்,கருப்பு துப்பட்டாவால் மூடிய முகத்துடன் நேற்றைய தினம் கோர்ட்டுக்கு வந்துள்ளார். அதேபோல, சுந்தரமும், மாஸ்க் அணிந்து முகத்தை மூடியிருந்தார்.. தீர்ப்பை வாசிக்கும்முன்பு, இருவரையும் பார்த்த நீதிபதி, இப்படி மூடிக்கொண்டு நின்றால், எப்படி அடையாளம் காண முடியும்? என்று போலீசாரை பார்த்து கேள்வி எழுப்பினார்.. உடனடியாக அபிராமியும், சுந்தரமும்,தங்களது முகமூடியை கழட்டிவிட்டார்கள்..
கடுமையான தண்டனை
வழக்கு குறித்து பேசிய நீதிபதி, சாப்பிட்டுவிட்டு 1 மணி நேரம் கழித்து தண்டனையை அறிவிப்பதாக சொன்னார்.. ஆனால், அடுத்த நிமிடத்திலேயே திரும்பி வந்துவிட்டார்.. 'இப்படியான குற்றவாளிகளுக்கு தண்டனையை அறிவிக்காமல், எப்படி என்னால் சாப்பிட முடியும்? தண்டனை விவரங்களை சொன்ன பிறகு சாப்பிடுவதாக சொனனார்..
பிறகு தண்டனையை அறிவிக்கும் முன்பு, "இருவருக்கும் தூக்கு தண்டனை தர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.. ஆனால், இது காந்தி தேசம் என்பதால், பழிக்கு பழியாக தண்டனையை வழங்க முடியாது..ஆனால், நீங்கள் இருவரும் செய்திருக்க கூடிய குற்றம் கொடூரமானது.. காம இச்சைக்கு குழந்தைகளை கொன்றதை ஏற்க முடியாது..
பெண் போலீஸ் மீது விழுந்து அழுத அபிராமி
கணவருடன் வாழ விருப்பமில்லையானால், பிரிந்து சென்றிருக்கலாமே? நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கும்போது, குழந்தைகளை கொலை செய்ததை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அறிவித்தார்..
இந்த தீர்ப்பு கேட்டதும் அபிராமி கையால் முகத்தை மூடி கதறி அழுதார்.. உடனே அவரை அங்கிருந்த பெண் போலீசார் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தினர்.. அதற்குள் கேமராக்கள் முழுவதும் அபிராமியை ஃபோகஸ் செய்தன.. ஆனாலும் பெண் போலீஸாரின் மீதே சாய்ந்து கதறி அழுதார் அபிராமி..
சிறையில் 8 வருடங்களாக அபிராமி இருந்தாலும், 8 ஹேர்-பின் போட்ட ஹேர்ஸ்டைலுடன் காணப்பட்டார்.. முகத்தை மூடி அழுதபோதெல்லாம் நீளமாக வளர்க்கப்பட்ட அவரது கைவிரல்களின் நகத்தில் நெயில் பாலிஷ் பளிச்சிட்டதை காண முடிந்தது.
இறுதி மூச்சு வரை ஆயுள்
இந்நிலையில் அபிராமிக்கு வழங்கப்பட்ட இறுதி மூச்சு வரை ஆயுள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "கடந்த 7 வருஷம் ஜாலியாக சிறையில் இருந்தார் என்றால், வெறும் ரிமாண்டு செய்யப்பட்ட கைதியாக மட்டுமே அபிராமி இருந்தார். ஆனால், இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது..
கடுங்காவல் ஆயுள் தண்டனை என்பது, நம்முடைய அரசுக்கு செலவு வைக்காமல், அந்த குற்றவாளிகளை நன்றாக வேலை வாங்குவார்கள்.. சுத்தம் செய்வது, பெருக்குவது, சமைப்பது, சட்டை துணிகளை துவைத்து தேய்த்து தருவது, என்று அவர்களின் ஆயுள் தண்டனை செலவில், முக்கால் பங்குக்கு சம்பாதிக்கும் அளவுக்கு வேலையை தந்துவிடுவார்கள்.. இதுபோன்றவர்களுக்கு எந்த ஈவு இரக்கமும் காட்ட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
நெஞ்சில் ஏறி உட்கார்ந்து
அதேபோல குற்றவியல் மூத்த வழக்கறிஞரும், அபிராமிக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருந்தவருமான தமிழ்வேந்தன், மற்றொரு சேனலுக்கு அபிராமி பற்றி கூறியிருக்கிறார்.. குழந்தைகள் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அப்போதைய குன்றக்குடி இன்ஸ்பெக்டர் சார்லஸுடன், அபிராமியின் வீட்டுக்கே நேரடியாக சென்றாராம்.
இதை பற்றி சொல்லும்போது, புருஷனும், பிள்ளைகளும் இருக்கும்வரை நிம்மதியாகவே வாழ முடியாது என்ற முடிவுக்கு கள்ளக்காதல்ஜோடி வந்தது... அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று முதலில் ஐடியா தந்தது சுந்தரம்தான்..
வயிற்றில் கரு உருவாகாமல் தடுக்கும் மென்சோவிட்டப் பிளஸ் என்ற மாத்திரை, தூக்க மாத்திரை இரண்டையுமே அபிராமியிடம் வாங்கி தந்துள்ளார்.. அபிராமி அதை பாலில் கலந்து தந்துவிடவும், ஒரு குழந்தை அதில் இறந்துவிட்டது.. இன்னொரு குழந்தை சாகவில்லை என்பதால், குழந்தையின் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து, குழந்தையின் தொண்டையை பிடித்து நெரித்து, பிறகு தொண்டையை மிதித்தே கொன்றுவிட்டார் அபிராமி என்று நடந்த சம்பவத்தை அதிர்ச்சி விலகாமல் கூறியிருக்கிறார்.
குழந்தைகள் போட்டோ
6 மாதங்களுக்கு முன்பு அபிராமி, திடீரென தன்னுடைய பிள்ளைகளை நினைத்து அழுதாராம்.. என் குழந்தைகளை நான் கொன்றிருக்கக்கூடாது.. அவங்க போட்டோவையாவது எனக்கு காட்டுங்களேன் என்று அழுதாராம்.. ஆனால், இந்த 7 வருடத்தில் ஒருமுறைகூட ஜாமீனில் விடப்படாத அபிராமிக்கு, வாழ்நாள் சிறையே தற்போது கிடைத்துவிட்டது..!!
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications