மாதம்பட்டி ரங்கராஜனை தொடர்ந்து.. விஜய் த்ரிஷாவை வம்புக்கு இழுத்த குரோஸி! கையில் சிலிண்டருடன் அட்ராசிட்டி
சென்னை: சமூக வலைதளங்களில் சமீப காலமாக நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பல்வேறு மீம்ஸ்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான குரோஸி (Kureshi) வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ கூட இப்போது அதே விவாதத்தில் சிக்கி சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

சிலிண்டர் வீடியோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் குரேஷி. அவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒரு கேஸ் சிலிண்டரின் அருகில் அமர்ந்தபடி ஒரு பிரபலமான திரைப்பட வசனத்திற்கு வாய் அசைத்து நடித்துள்ளார்.
தற்போது சில பகுதிகளில் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும், அதைக் குறித்து சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்கள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த சூழ்நிலையில் தான் குரேஷி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
"காரப்பொரி" வசனம் - ரசிகர்கள் கண்டுபிடித்த இணைப்பு
வீடியோவில் அவர் பேசிய வசனம் சாதாரண வசனம் அல்ல. அது கில்லி படத்தில் வரும் ஒரு பிரபலமான காட்சி. அந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷா நடித்திருக்கும் ஒரு காட்சியில் "எனக்கு காரப்பொரி சாப்பிடணும் போல இருக்கு" என்று திரிஷா கூறுவார். அதற்கு விஜய் சற்று கோபத்துடன் "இப்ப உனக்கு காரப்பொரி கேட்குதா?" என்று கேட்கும் அந்த காட்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
அதே வசனத்தை தான் குரேஷி இந்த வீடியோவில் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அந்த வசனத்தை பேசும் போது அருகில் கேஸ் சிலிண்டர் வைத்து நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது சிலிண்டர் மீம்ஸா
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோ குறித்து வெவ்வேறு கருத்துகளை கூற ஆரம்பித்தனர். சிலர் "இது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி போட்ட காமெடி வீடியோ தான்" என்று கூறினார்கள்.
ஆனால் இன்னொரு தரப்பு ரசிகர்கள் "இது சாதாரண சிலிண்டர் வீடியோ மாதிரி தெரியவில்லை. விஜய் - த்ரிஷா பற்றி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் மீம்ஸ்களை தான் குரேஷி கிண்டல் செய்கிறார் போல இருக்கிறது" என்று கூற ஆரம்பித்தனர்.
குறிப்பாக அந்த டயலாக் தேர்வு செய்யப்பட்ட விதமும், சிலிண்டர் அருகில் அமர்ந்து பேசிய விதமும் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் தொடரும் மீம்ஸ்
சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் த்ரிஷா ஒரே காரில் சென்றதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியது. அதற்கு பிறகு அவர்களை குறிவைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில் குரேஷி வெளியிட்ட இந்த வீடியோவும் அந்த மீம்ஸ் கலாச்சாரத்தில் சேர்க்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
பார்த்திபன் பேச்சும் வைரல்
இதற்கிடையில் நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் கூறிய ஒரு கருத்தும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து கேள்வி கேட்ட போது அவர் ரைமிங்காக "குந்தவை சில நாட்கள் வீட்டில் குந்த வைத்தால் நல்லது" என்று கூறியிருந்தார். பிரியங்கா அந்த நேரத்தில் "குந்தவை" என்று சொல்லி பாயிண்ட் கொடுத்தது அந்த காட்சியை மேலும் வைரலாக்கியது.
குரேஷியின் முந்தைய வீடியோ
இதற்கு முன்பும் குரேஷி ஒரு வீடியோவில் செஃப் மாதம்பட்டி ரங்கராஜன் பேசும் ஸ்டைலை காமெடியாக செய்து ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். அந்த வீடியோவும் அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கூட அவர் நேரடியாக யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் ரசிகர்களே அதில் பல்வேறு அர்த்தங்களை கண்டுபிடித்து விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications