உங்க மகள்களே உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட போறாங்க மேடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகள்களுக்கு போட்டியா இது.... நடிகை குஷ்புவை கலாய்த்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள். காரணம் அவரது மாறி வரும் இளமைத் தோற்றம்தான்.

அந்த காலத்திலிருந்தே சினிமாவுல யாருக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு தாங்க. அவங்களுக்கு மட்டும்தான் ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளார்கள்.

90ஸ் கிட்ஸ் களின் கனவுகன்னி குஷ்புதான். அந்த காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் சினிமா, அரசியல், சின்னத்திரை எல்லாத்திலும் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்காங்க. ரொம்ப பிஸியான லைஃப் இவங்களோடது.

 ஸ்லிம் குஷ்பு

ஸ்லிம் குஷ்பு

இந்த லாக் டவுன் டைம்ல கொழுக்கு மொழுக்குனு இருந்த நம்ம குஷ்பூ , ஸ்லிம்மா வருஷம் 16 குஷ்பு மாதிரி ஆயிட்டாங்க. இவங்க இப்படித்தான் இருப்பாங்க ன்னு தெரிஞ்சுதான் அன்னைக்கே சின்னதம்பி ல என்றும் 16னு இவர்களுக்காக பாட்டு எழுதினாரோ என்னவோ. வயசுக்கு வந்த இரண்டு மகள்களின் தாய் அப்படின்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு செம அழகா மாறிட்டாங்க.

 ஸ்லிலும் அழகுதான்

ஸ்லிலும் அழகுதான்

இவங்க புசுபுசுன்னு இருக்கிறதுதான் இவங்களுக்கு அழகு அப்படின்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்கும்போது நான் ஸ்லிம் ஆனாலும் செம அழகு என்று நிரூபித்து இருக்காங்க. இவ்வளவு அழகா ஸ்லிம்மா ஆகுறதுக்கு என்ன பண்ணினீங்க என்று எல்லாரும் கேட்டால், அவங்க சொல்ற ஒரே வார்த்தை இந்த லாக் டவுன்ல வீட்டு வேலை ஃபுல்லா, எல்லா வேலையும் நானே பார்த்தேன்.

 எவ்வளவு வேலை

எவ்வளவு வேலை

துணைக்கு யாரும் இல்லாம வீட்டை துடைக்கிறதுலிருந்து பாத்ரூம் கழுவுவது வரைக்கும் எல்லா வேலையும் நானே தான் பார்த்தேன். அதோட ஃப்ரீ டைம்ல யோகா கொஞ்சம் எக்சர்சைஸ் இதுதாங்க காரணம்னு சொல்றாங்க.. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள ஸ்லிம் செல்பிகளை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 சூப்பர் மெலிவு

சூப்பர் மெலிவு

இதுக்கு முன்னாடி அவங்க மகள் அனந்திதா தனது உடல் எடையை குறைத்து க்யூட் லுக் லுக்கிற்கு மாறிய போட்டோஸ்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அடுத்ததா அம்மாவான குஷ்புவும் ஸ்லிம்மா ஆகியிருக்கிறதை பார்க்கும்போது மகளை எங்கரேஜ் பண்றதுக்காக குஷ்புவும் டயட் இருந்திருப்பார்களா அப்படின்னு ரசிகர்கள் கமெண்ட் பண்ணுகிறார்கள்.

 கூடிய அழகு

கூடிய அழகு

விதவிதமான டிரஸ்ல அழகா மேக்கப் போட்டு செமையா போட்டோஸ் எடுத்து அப்லோட் பண்ணி இருக்காங்க 90ஸ் கிட்ஸ் கனவுக்கன்னி நம்ம குஷ்பூ. 28 வருஷத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் இணைந்து "அண்ணாத்த" படத்தில் நடிக்கப் போறாங்க. இந்த படப்பிடிப்பு தற்போது லாக்டவுனால் பாதிக்கப்பட்டிருக்கு. சூப்பர் ஸ்டார் படத்திற்காக குஷ்பு எடையைக் குறைத்திருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.

 நல்ல ஊக்கம்

நல்ல ஊக்கம்

எதுவாயிருந்தாலும் அன்று முதல் இன்று வரை குஷ்புவுக்கு அழகே அந்த பூசின உடல்வாகுதான். ஆனால் இப்போது ஸ்லிம்மாகி அவருடைய மகள்களே பொறாமைப்படும் அளவுக்கு படு க்யூட்டாக மாறியிருக்கிறார்.. இந்த வகையில் உடல் எடையைக் குறைக்க விரும்பும், முயலும் பல பெண்களுக்கும் மோடிவேஷனாக மாறியுள்ளார் குஷ்பு. குஷ்பு வழியில் நாங்களும் ஸ்லிம் ஆவோம் என பலரும் களம் இறங்கக் கூடும்.. எனவே இதை வரவேற்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+