25 வருஷத்துக்கு அப்புறம் குஷி ரீ ரிலீஸ்.. 2வது பாகத்தில் விஜய் மகனும், ஜோதிகா மகளும்? Sj சூர்யா கொடுத்த பதில்
சென்னை: சில படங்கள் வெறும் படமா மட்டும் இருக்காது. அது ஒரு எமோஷன். அப்படி ரசிகர்களின் மனசுல நீங்காத இடம் பிடிச்ச ஒரு படம்னா, அது விஜய் மற்றும் ஜோதிகா நடிச்ச குஷி தான். 2000-ல எஸ்.ஜே.சூர்யா டைரக்ஷன்ல ரிலீஸ் ஆகி, படம் ஹிட் மட்டுமில்ல, ஒரு கல்ட் கிளாசிக்காவே மாறிடுச்சு. இந்த படம் கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு அப்புறம், மறுபடியும் செப்டம்பர் 26-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகப் போகுது. இந்த படத்தோட பிரஸ் மீட்ல குஷி 2 படத்தைப் பத்தின அப்டேட் கொடுத்து, ரசிகர்களை சர்ப்ரைஸ் பண்ணியிருக்காங்க.

குஷியின் மேஜிக்
குஷி படம் ஏன் இத்தனை வருஷத்துக்குப் பிறகும் கொண்டாடப்படுது? அதுல இருந்த சில மேஜிக் விஷயங்கள்தான் காரணம். படத்தில் பல காட்சிகள் ரசிகர்களின் மனசுல ஆழமா பதிஞ்சிருக்கு. விஜய் தன் மனசுக்குள்ள ஜோதிகாவை இமேஜின் பண்ணி, டான்ஸ் ஆடுற மனசெல்லாம் பாட்டு சீன், அவங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் டைம் பைக்கில் பேசி சண்டை போடுற சீன், கடைசியா க்ளைமாக்ஸ்ல ரெண்டு பேரும் அவங்க ஈகோவை விட்டுட்டு, சேருற சீன் என, ஒவ்வொரு சீனும் பியூர் லவ்வா இருக்கும்.
ஹிட் பாடல்கள்
தேவாவோட மியூசிக்ல வந்த ஒவ்வொரு பாட்டும் அல்டிமேட் ஹிட். ஒரு பொண்ணு ஒன்னு, மொட்டு ஒன்று, கட்டிப்புடி கட்டிபுடான்னு இந்த பாட்டுக்கு எல்லாம் இப்போகூட பெரிய ஃபேன் பேஸ் இருக்கு. முக்கியமா, மக்கரீனா மக்கரீனா பாட்டு பியூர் எனர்ஜி. இந்த பாட்டுக்கள்லாம் இப்போவும் பல பேரோட ரிங்டோன் லிஸ்ட்ல இருக்கு.

அசத்தல் காமெடி
படத்தோட காமெடி டிராக், சாதாரணமா இருக்காது. ஒருத்தரை ஒருத்தர் போட்டி போட்டு கலாய்க்கிறதுதான் காமெடி. விஜய், அவன்ட்ட ஃபைட் சீனே இல்லையானு கேட்கும்போது, ஜோதிகா ஃபிட்பால் கபடினு கிண்டல் பண்றது, அப்புறம் உடம்பு சரியில்லாத மாதிரி விஜய் நடிக்கிறதுன்னு, எல்லா சீனும் வயிறு குலுங்க சிரிக்க வெச்சது.
குஷி பிரஸ் மீட்
குஷி படம் ரீ-ரிலீஸ் ஆகுறதை பத்தி பேசின தயாரிப்பாளர், "இத்தனை வருஷத்துக்குப் பிறகும் குஷி படத்தை பார்த்தா மக்கள் சந்தோஷப்படுவாங்க. ஆரம்பத்துல, எடிட்டர் விஜயன் என்கிட்ட வாலி படம் நல்லா இருக்கு, அதனால அஜித் சார் சூர்யாவுக்கு பைக் வாங்கி கொடுத்தார்னு சொன்னார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். ஹீரோவா யாரை வேணா போடலாம், ஆனா டைரக்டர் எஸ் ஜே சூர்யாவாகத்தான் இருக்கணும்னு சொன்னேன்.
பிறகு, விஜய்கிட்ட கதையை சொன்னோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூணு மொழியிலயும் சூர்யாதான் டைரக்ட் பண்ணினாரு. அந்த நேரத்துல விஜய் டாப் ஹீரோவா இருந்தார். ஆனாலும், படம்ல ஃபைட் சீன் இல்லையே, வைங்கனு கேட்டாரு. ஆனா, சூர்யா இது லவ் ஸ்டோரி, ஃபைட் சீன் வைக்க முடியாதுனு சொன்னார். அப்புறம் பேசி ஒரு சீன் வச்சோம்"னு சொன்னார்.
"படம் இந்தியன் படம் மாதிரி மாஸ் படமா இல்லையே, காதல் கதையா இருக்கேன்னு ஆரம்பத்துல பயந்தேன். ஆனா முதல் காட்சிக்குப் பிறகு படம் ஹிட்னு சூர்யாகிட்ட சொன்னேன். வைரமுத்து சாரும் படத்தை பாராட்டினாரு."
"இப்போ பார்ட் 2 படங்கள் ட்ரெண்டாகி வருது. அதுல குஷி 2 படம் எடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதையும் சூர்யாதான் டைரக்ட் பண்ணனும். அதுல விஜய் நடிச்சாலும் சரி, அவருடைய மகன் நடிச்சாலும் சரி, அல்லது வேறு யார் நடிச்சாலும் சரி சூர்யா தான் இயக்குவார்"னு சொல்லி பெரிய பாம்மை போட்டுவிட்டார்.
அதே நேரம், சூர்யாகிட்ட "குஷி படத்தை விஜய், ஜோதிகாவை வெச்சு எடுத்த மாதிரி, குஷி 2 படத்தை விஜய் மகனையும், ஜோதிகா மகளையும் வெச்சு எடுப்பீங்களா?"னு கேட்டபோது, "அப்படிலாம் அமைந்தால் பார்க்கலாம்"னு அவர் கொடுத்த பதில், ரசிகர்களுக்குப் பெரிய ஹோப் கொடுத்திருக்கு.
இந்த அப்டேட்ட பார்த்தா, குஷி 2 படம் கன்ஃபார்ம்னுதான் தோணுது. இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகுறது, 90'ஸ் கிட்ஸ்-க்கு ஒரு ட்ரீட். கூடவே, புதுசா வர்ற தலைமுறைக்கும் ஒரு கல்ட் கிளாசிக்னா என்னனு புரியவைக்கும்.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான்












Click it and Unblock the Notifications