படையப்பா படத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னேன்! சிவாஜி சொன்னதை இப்போதும் மறக்க முடியல! லட்சுமி எமோஷனல்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக லக்ஷ்மி நடித்திருப்பார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது நான் படையப்பா படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் ஆனாலும் இயக்குனரால் தான் அந்த படத்தில் நடித்தேன். அப்போது சிவாஜி சொன்ன வார்த்தையை என்னால் இப்போதும் மறக்க முடியவில்லை என்று பேசி இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் திரைப்படங்களில் படையப்பா திரைப்படம் ஒன்றாக இருக்கும். ஒரே பாடலில் சூரியவம்சம் திரைப்படத்தில் எப்படி சரத்குமார் தேவயானி டாப்பில் வருவார்களோ அதுபோல படையப்பா படத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய சித்தப்பா குடும்பம் தன்னை ஏமாற்றி சொத்துகளை பறித்தாலும் வெற்றிக் கொடி கட்டு என்ற பாடலோடு மீண்டும் பெரிய பணக்காரர் ஆகிவிடுவார்.

தன்னுடைய நண்பர்களால் வாழவும் முடியும், அதே நேரத்தில் நாம் பலருக்கு நன்மை செய்தால் நம் கூட இருப்பவர்கள் நமக்கு தீமையே செய்தாலும் அது நமக்கு நன்மையாகும் என்று படையப்பா படத்தில் அழகாக காட்டியிருப்பார்கள். அந்த படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு இப்ப வரைக்கும் பேசப்படுகிறது. அதேபோல அந்த படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனையும் யாராலும் மறந்து இருக்க முடியாது.
ரம்யா கிருஷ்ணன் அந்த படத்தில் நீலாம்பரியாக நடித்திருப்பார். அதுபோல அந்த திரைப்படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தவர்களும் இப்போதும் ரசிகர்களின் மனதில் நிற்கின்றனர். அதில் அந்த படத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துவது ரஜினியின் அம்மா லட்சுமி தான்.

லட்சுமி ஆரம்பத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிறகு அவருக்கு அம்மாவாகவே அந்த படத்தில் நடித்திருந்தார். அதுவும் தன்னை அவமானப்படுத்தி வெளியே அனுப்பிய தன்னுடைய அண்ணன் வீட்டில் தான் வசதியாக வந்த பிறகு திருமணம் செய்ய சம்மதித்து விட்டு பிறகு அந்த வீட்டில் வேலைக்காரியாக இருந்த வசுவை தன்னுடைய மகன் காதலிப்பது தெரிந்து வசுவை தன்னுடைய மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பது முக்கிய திருப்பமாக இருக்கும்.

இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் நடிகை லட்சுமி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டார். அப்போது லட்சுமி பேசுகையில் நான் முதலில் படையப்பா படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் இயக்குனர் தான் என்னை கட்டாயப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தார். அது அவருக்கு தெரியும்.

ஆனால் அந்த படத்தில் நடித்த அனுபவம் என்னால் மறக்க முடியாது. அந்த படம் தான் சிவாஜி சாருக்கு கடைசி படம். அந்த படத்தில் நான் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தேன். அது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். அதற்கு முன்பு சிவாஜி சார் குடும்பத்தோடு நல்ல பழக்கம் இருந்தது. சினிமா நடிப்பை தாண்டி குடும்ப நண்பர்களாக அடிக்கடி அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து இருக்கிறேன்.
அப்போது சிவாஜி சார் சொன்ன வார்த்தை என்னால் இப்போதும் மறக்க முடியாது. அதாவது நாம வேண்டான்னு சண்டை போட்டு ஒதுக்கிட்ட உறவுகள் திரும்ப வராது. நாம சண்டை போட்டு ஒதுக்கின பிறகு நாம வேணும்னு நினைத்த போது அவங்க நம்மளை விட வளர்ந்திருந்தால் ரொம்ப கஷ்டமா இருக்கும்.

அதாவது நாம மீண்டும் அவங்க கிட்ட போகும்போது அவர்களுடைய வளர்ச்சியை நாம பயன்படுத்த போறது போல ஆகிடும் என்று சொன்னாரு. அந்த விஷயத்தை நான் இப்போ வரைக்கும் கடைப்பிடிக்கிறேன். அதை என்னால் மறக்க முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் லட்சுமி சொல்லியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications