Lakshmi Stores Serial: அப்பாவி தாத்தா... ஏமாற்றும் பேத்திகள்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமியின் தாத்தா ரொம்ப அப்பாவியா இருக்கார். பேத்திகள் ரெண்டு பேரும் நல்லாவே ஏமாத்தறாங்க.
ஆடிப் பெருக்குக்கு தாலி பிரிச்சு கோர்க்க பாக்கியலட்சுமி பேத்திக்கு தாத்தா ஏற்பாடு பண்றார். கோயிலுக்கு ரவியையும் வர சொல்லுன்னு உலகமே அறியாதவர் போல பேசுகிறார்.
அன்று ரிஜிஸ்டர் ஆஃபீசில் நடந்தது தெரிந்தும், அதோட ரீ ஆக்ஷன் என்னன்னு கூடவா ஒரு பொறுப்புள்ள தாத்தா இன்னும் அறியாமல் இருப்பார்.

கடைக்கு பாக்கியலட்சுமி
பேத்தி பாக்கிய லட்சுமி கடைக்கும் போறதில்லை, மகாலட்சுமி அம்மா வீட்டுக்கும் போறதில்லை. என்னாச்சு ஏதாச்சுன்னு தாத்தா கேட்க மாட்டாரா? இல்லை வீட்டில் எப்போதும் சண்டைக்கு காத்து இருக்கும் அண்ணிக்கு சந்தேகம் வராதா? குடும்ப கதையை இப்படியா தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் கொண்டு போறது?

பிரச்சனை பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி தேவராஜை அடிச்சது பெரிய பிரச்சனையாகி, இப்போதுதான் அது மகா லட்சுமிக்கு தெரிந்து வெடித்து இருக்கிறது. இதை சரி செய்வது என்பது கொஞ்சம் இயலாத காரியம்தான் என்றாலும், பாக்யலட்சுமியின் தாத்தா தொலைத்த தங்கம், பணம் எல்லாம் தேவராஜின் அப்பாவிடம் இருக்கிறது என்று எப்போது தெரிகிறதோ, அப்போதுதான் பிரச்சனை சரியாகும்.

இந்த தாத்தா
அந்த தாத்தா அதாவது பாக்கிய லட்சுமியின் தாத்தா மகா வீட்டில் நடக்கும் உண்மையை தெரிஞ்சுக்காம அறியாமையில் இருக்கார். தேவராஜ் அப்பா, மகாலட்சுமியின் மாமனார் அதாவது அந்த தாத்தா வீட்டில் இருப்பதே இல்லை., எங்குதான் போனார்... இத்தனை பிரச்சனை நடக்கிறது.. அதான் காசி போயிட்டு வந்துட்டாரே... அப்புறம் என்ன.எங்கே போனார் இந்த தாத்தா?

வரலையா ரவி?
தாலி பிரிச்சு கோர்க்க நல்ல நேரம் போய்ரும்மா... ரவி தம்பி எங்க வந்துகிட்டு இருக்குதுன்னு போன் செய்து கேளுன்னு தாத்தா சொல்றார்.ரவி வரேன்னு சொல்லிட்டார்னு அக்காகிட்டேயே போய் சொல்றா தங்கை வனிதா. அதோட விட்டுடறலாமா பாக்கியலட்சுமி..இத்தனை நடந்த பிறகும் ரவி வரேன்னு சொன்னாரான்னு ஒரு சந்தேகம் வராது? இப்படி ஏமாத்து வேலை குடும்பத்தில் ஒருத்தர் மீது ஒருத்தர் பாசம் வச்சு இருந்தால் கூட இருப்பது நல்லவா இருக்கு!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications