Lakshmi Stores Serial: கண்ணைத் திறந்துகிட்டே கிணத்துல விழறதுன்றது இதுதானா?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் தப்பான மாப்பிள்ளைன்னு தெரிஞ்சும் அவனுக்கு தங்கை கமலாவை கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார் அண்ணன் தேவராஜ்.
மினிஸ்டர் சகுந்தலா தேவி, மாகாலட்சுமியின் மேல் உள்ள பகையால், அவரது குடும்பத்துக்கு கெடுதல் செய்ய நினைத்து, மகாலட்சுமி நாத்தனாருக்கு பணக்கார குடும்பம்னு சொல்லி ஏமாத்தி, பொம்பளை பொறுக்கி மாப்பிள்ளையைப் பார்க்கறாங்க.
தேவராஜும் இது தெரியாமல் தங்கச்சிக்கு மினிஸ்டர் பார்த்த மாப்பிள்ளை,அவங்க நம்ம குடும்பத்துக்கு நல்லதுதான் செய்வாங்க. அதனால, கமலாவுக்கு இந்த மாப்பிள்ளையுடன்தான் கல்யாணம்னு முடிவா சொல்றார்.

சகுந்தலாதேவி தேவராஜ்
மத்திய இணை அமைச்சர் சகுந்தலா தேவியிடம் லீகல் அட்வைசரா தேவராஜ் இருக்கார்.இவங்க மனைவிதான் மகாலட்சுமி, லட்சுமி ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகாலிங்கத்தின் மூத்த மருமகள். மினிஸ்டருக்கு பாரம்பரியமான லட்சுமி ஸ்டோர்ஸை வாங்கிடணும்னு ஆசை. இதை தடுக்கும் மகாலட்சுமியின்மேல் ஆத்திரம்,கோபம். குடும்பத்தில் மகாலட்சுமி சந்தோஷமாக இருந்துடக் கூடாதுன்னு சதி வேலை எல்லாம் செய்யறாங்க.

கமலா கல்யாணம்
இதில் ஒண்ணுதான் கமலா கல்யாணம். கமலாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் தேவராஜ்.ரொம்ப நல்ல குடும்பம்.அந்தஸ்து, வசதி எல்லாம் எங்களுக்கு நிகரான குடும்பம். அந்த பையனுக்கு உங்க தங்கை கமலாவை பேசி முடிக்கலாமான்னு கேட்டு,எல்லாத்தையும் முடிச்சுடறாங்க. ஆனா, நான்தான் மாப்பிள்ளைப் பார்த்தேன்னு மகாகிட்ட சொல்லாதீங்க. நான் பார்த்தேன்னு தெரிஞ்சாலே சம்மதிக்க மாட்டாங்கன்னு சகுந்தலா தேவி சொல்லிடறாங்க.

சொல்படி நடந்து
தேவராஜும் மினிஸ்டர் சொல்படி நடந்துகிட்டு, கமலாவுக்கு பார்த்த மாப்பிள்ளை மினிஸ்டர் பார்த்ததுதான்னு சொல்லாமல் இருந்துடறார். விளைவு இப்போது நிச்சயதார்த்தத்துக்கு புடவை எடுக்கும் அளவுக்கு வந்துருது. ஆனால், பாக்கிய லட்சுமியின் அண்ணன்தான் இந்த மாப்பிள்ளை பையன் ஏற்கனவே நிலான்னு ஒரு பெண்ணை காதலிச்சு கைவிட்டுட்டு, இப்போ உங்க தங்கச்சியை கல்யாணம் செய்துக்க தயாரா இருக்கான்னு நிலாவை அழைச்சுக்கிட்டு வந்து ஆதாரத்தோடு சொல்லியும் தேவராஜ் பிடிவாதமா இருக்கார்.

இவன்தான் கமலாவுக்கு
கமலாவுக்கு மினிஸ்டர் பார்த்த இந்த மாப்பிள்ளையோடுதான் கல்யாணம்.இது யார் தடுத்தாலும் நிற்காதுன்னு சொல்றார் தேவராஜ். அப்போ இந்த மாப்பிள்ளை சகுந்தலா தேவி பார்த்த மாப்பிள்ளையான்னு கேட்கறாங்க மகா.ஆமாம்னு தேவராஜ் சொல்ல, ஏன் இதுவரைக்கும் சொல்லலைன்னு மகா கேட்கறாங்க.சொல்லிட்டா ஒத்துக்குவீங்களான்னு கேட்கறார்.
இப்போது தங்கையிடம் போயி, இந்த அண்ணன் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா. நான் பார்த்து இருக்கும் இந்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்குவியா மாட்டியான்னு கேட்கறார்.
கண்ணைத் திறந்துகிட்டே கிணத்துல விழறதுன்னு சொல்வாங்களே அது இதுதானா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications