விஜய் டிவியோடு பிரச்சனை! குக் வித் கோமாளி போக காரணம் இதுதான்! லட்சுமி ராமகிருஷ்ணன் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக வெளியே அனுப்ப ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவருக்கும் விஜய் டிவிக்கும் ஏற்கனவே பிரச்சனை இருக்கும் நிலையில் இவர் எப்படி விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆனால் சின்னத்திரையில் அவர் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அவருக்கு பெரிய லெவல் பிரபலத்தை கொடுத்து விட்டது. பலருடைய குடும்ப பஞ்சாயத்தை நடுவராக மாறி இவர் தீர்த்து வைத்த விதம் பலராலும் பாராட்டப்பட்டது.

Vijay TV Cook With Comali

ராமர் பேசிய வசனம்

அதே நேரத்தில் ட்ரோலும் செய்யப்பட்டது. இவர்களில் டிஆர்பிக்காக அடுத்தவர்களின் குடும்ப பிரச்சனையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற பெரிய குற்றச்சாட்டு வந்தது. அதனாலயே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பாதியிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் இப்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் சம்பவம் தான் நடைபெற்று இருக்கிறது.

விஜய் டிவி நிகழ்ச்சி

அதாவது சொல்வதெல்லாம் மூலம் பிரபலமடைந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது, காரணம் விஜய் டிவி நிகழ்ச்சியின் மீதும் லட்சுமி ராமகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடுத்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அவர் எப்படி விஜய் டிவி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பது பலருடைய கேள்வி.

விஜய் டிவியோடு பிரச்சனை

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எப்போதுமே கம்பீரமாக இருக்கக்கூடியவர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்து கோமாளிகளுடன் சேர்ந்து சமைப்பாரா? என்பது பலர் கேள்வி எழுப்பி வந்தனர். விஜய் டிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் பிரச்சனைக்கு வர காரணமே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகளில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி பேசும் வார்த்தை என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வார்த்தை தான்.

சொல்வதெல்லாம் உண்மை ட்ரோல்

இதை விஜய் டிவியில் ராமர் ஒரு நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ட்ரோல் செய்வது போலவே "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" என்று பேசி இருப்பார். அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் பெரிதாக ஒரு ரியாக்ஷன் காட்டவில்லை. ஆனால் அடுத்ததாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் ட்ரோல் செய்து எபிசோடு வைத்திருந்தனர்.

விஜய் டிவிக்கு நோட்டீஸ்

இதனால் கோபமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விஜய் டிவி மற்றும் ராமர் மீதும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அந்த நேரத்தில் விஜய் டிவி மன்னிப்பு கேட்டிருந்தனர். இந்த நிலையில் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவிக்கு வருகிறார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அவர் பேசும்போது என்னை இத்தனை நாட்களாக எல்லோரும் சீரியஸ் ஆகவே பார்த்திருக்கிறார்கள். அதனால் ஒரு ஜாலியான நிகழ்ச்சி பண்ணலாம் என்று நினைத்தேன்.

ராமர் மீது கோபம்

விஜய் டிவி மிக எனக்கு கோபம் இருந்தது உண்மைதான். ராமர் பற்றி நானும் பேசி இருந்தேன். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள் நானும் ராமர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இது பற்றி பேசி இருந்தேன். இப்போ எல்லாமே சரியாகி விட்டது. அதனால் விஜய் டிவியில் வர இருக்கிறேன்.

Vijay TV Cook With Comali

லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

ஏற்கனவே விஜய் டிவியில் இருந்து சில வருடங்களாகவே என்னை கூப்பிட்டு கொண்டு இருந்தார்கள், நான்தான் போகவில்லை. இப்போது குக் வித் கோமாளி டீமில் இருந்து ஒரு பெண் என்னிடம் பேசினார். அது எனக்கு சரி என்று பட்டது. அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் ப்ரோமோவை பார்த்துவிட்டு பலர் உண்மையில் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு போறீங்களா என்று கேட்கிறார்கள். நான் ஜாலியா ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம்.

கலைஞர் டிவியில் புது நிகழ்ச்சி

அதுபோல இனி இப்படியே இருப்பேன் என்றும் சொல்லி விட முடியாது. மீண்டும் பழைய ஃபார்ம்மில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே கலைஞர் டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் குடும்பப் பிரச்சினையை பகிர்ந்து கொள்ள விரும்புபவர்கள் போன் செய்யலாம் என்று ஒரு அட்வர்டைஸ்மென்ட் வந்திருந்தது.

உங்கள் கருத்து

அதனால் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கலைஞர் டிவியில் தான் சொல்வதெல்லாம் உண்மை போல ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் இவர் குக்காக வரப்போகிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ட்ரோல் செய்த ராமரும் அதே நிகழ்ச்சியில் இருக்கிறார். இதனால் நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம். லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவிக்கு வந்தது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க பாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+