"அந்த” நடிகரிடம் காதலை சொல்ல போன நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்! ஆனால், அவர் இப்படி சொல்லிட்டாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல நடிகர் ஒருவரை தான் ஆரம்பத்தில் காதலித்தாராம். அந்த நடிகரிடம் தன்னுடைய காதலை சொல்லப்போக கடைசியில் அவர் நீங்க என்னுடைய தங்கச்சி என்று சொல்லிவிட்டாராம். இது குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடிகை, தொகுப்பாளினி, இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என்று பல திறமைகளை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சி அந்த நேரத்தில் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த காலகட்டத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அந்த சேனலில் ஒளிபரப்பானது.

Lakshmy Ramakrishnan Kamal Haasan Cook With Comal

அப்போது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு சிலர் தங்களுடைய குடும்ப பிரச்சனையைப் பற்றி பேசி தீர்வு கண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அதோடு அதிகமான விமர்சனங்களும் வந்தது. டிஆர்பிக்காக அடுத்தவர்களுடைய குடும்ப விஷயத்தில் இவர்கள் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் மீது புகார் கொடுக்கப்பட்டது.

பிறகு திடீரென்று இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் ட்ரோல் செய்து பேசியிருந்தனர். அப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவி மீதும் தன்னை ட்ரோல் செய்த ராமர் மீதும் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதற்காக நோட்டீசும் வழங்கி இருந்தார். ஆனால் சில வருடங்கள் கழித்து இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் போட்டியாளராக இருக்கிறார். அதே நிகழ்ச்சியில் கோமாளியாக ராமரும் இருக்கிறார்.

இதுவரைக்கும் இதுவரை டெரராக பார்த்து வந்த ரசிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்குள் இவ்வளவு ஜாலியான கேரக்டரும் இருக்கிறதா என்று தெரிய வந்திருக்கிறது. இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன். என்னுடைய இன்னொரு பக்கத்தையும் மக்கள் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

Lakshmy Ramakrishnan Kamal Haasan Cook With Comal

இந்த நிலையில் இந்த வாரத்தில் சில நடிகர்களின் கேட்டப்பை கோமாளிகள் போட்டு இருக்கிறார்கள். அப்போது விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்களில் கட்டவுட் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர் எந்த நடிகரின் போட்டோவுக்கு மாலை போடுகிறாரோ அந்த நடிகரின் வேடம் போட்ட கோமாளி அந்த குக்குக்கு கிடைப்பார். அதுபோல லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நடிகர்களில் யாரை செலக்ட் பண்ண போகிறார் என்று தொகுப்பாளர் தர்ஷன் கேட்டிருந்தார்.

அப்போது ராஜு, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இங்கிருக்கிற நடிகர்களில் ஒருவரை தான் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் காதலிச்சாங்க. அந்த நடிகரிடம் போய் காதலையும் சொன்னாங்க அந்த விஷயம் தெரியுமா? என்று கேட்டதும், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆமா என்று சிரித்தபடியே அது கமல்ஹாசன் சார் தான். அவர்தான் என்னுடைய கிரஷ். அவரிடம் போய் என்னுடைய காதலை சொல்லப் போனேன். ஆனால் அவர் நீங்க என்னுடைய தங்கச்சி என்று சொல்லிவிட்டார் அன்னையிலிருந்து அவர் என்னுடைய அண்ணன் தான் என்று சொல்லியிருந்தார். பிறகு கமல்ஹாசன் பேனர்க்கு அவர் மாலை போட கமல்ஹாசன் கெட்டப் போட்டு இருந்த தங்கதுரை இந்த வாரம் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு கோமாளியாக வந்திருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+