ராதிகா அக்கா ரொம்ப திட்டுவாங்க! மேக்கப் ரூமில் நடந்த சம்பவம்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை நிரோஷா
சென்னை: நடிகை நிரோஷா லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கும்போது தன்னுடைய அக்கா நடிகை ராதிகா குறித்தும் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய அக்காவை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை பற்றியும் ஆனால் தன்னுடைய அக்கா தன்னை திட்டியதால் நடந்த அசம்பாவிதம் குறித்தும் நடிகை நிரோஷா வெளிப்படையாக பேசி இருக்கும் நிலையில் அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை நிரோஷா கதாநாயகியாக இருக்கும்போது நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்த நிலையில் இப்போது அவருக்கு ஜோடியாக தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று பெருமையாக நிரோஷா பேசியிருக்கிறார். அதோட தன்னுடைய அக்கா பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதாவது என்னுடைய அக்கா ரொம்பவே திட்டுவாங்க. ஆனால் அவங்கதான் எனக்கு வழிகாட்டி. அதுபோல நான் ராதிகா அக்கா உடைய தீவிரமான ரசிகை என்று ராதிகா பற்றி பெருமையாக பேசி இருக்கும் நிரோஷா வீட்டில் என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார். அவர் இல்லாமல் என்னால் இரண்டாவது இன்னிங்ஸில் வந்திருக்க முடியாது. என்னுடைய கணவர் ராம்கி தான் எனக்கு நிறைய மோட்டிவேஷன் செய்வார்.
ஆனால் திருமணத்திற்கு முன்பு என்னுடைய அக்கா எனக்கு மோட்டிவேஷனலாக இருந்தார். இப்போது என்னுடைய வீட்டுக்காரர் எனக்கு செய்து கொண்டிருக்கிறார். ஆனால் எங்க அக்கா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க. அந்த காலத்தில் நாங்க ஒன்றாக நடிக்கப் போகும்போது மேக்கப் ரூமில் அக்கா வருவதற்கு முன்பே நான் மேக்கப் டேபிளில் போய் அமர்ந்து விடுவேன். ஏன்னா அவங்க வந்தா இப்படி மேக்கப் பண்ணி இருக்க அப்படி போட்டு இருக்க என்று ஏதாவது திட்டிட்டே இருப்பாங்க.
ஐ லைனரை இப்படி போட்டு இருக்க என்று திட்டுவார். அதற்கு பயந்துகிட்டே அவர் வருவதற்கு முன்பு நாங்கள் ரெடியாக வேண்டும் என்று எல்லா வேலைகளையும் முடித்து விடுவோம். ஒரு நாள் அப்படித்தான் என்னுடைய மேக்கப் மேன் டீ குடித்துக் கொண்டே எனக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அங்கு அக்கா வந்துவிட்டார். அக்காவை பார்த்ததும் மேக்கப்மேன் பதட்டத்தில் டீ கப்பை தொட்டு மேக்கப் போட வந்து விட்டார். இதை பார்த்ததும் ராதிகா அக்கா எது என்ன என்று கேட்க அதற்கு அவர் விடுங்க சூட்டிங்கில் பார்த்துக்கலாம் என்று சமாளித்து விட்டார்.
ஆனாலும் அக்கா எப்போதுமே என்னிடம் நிறைய அக்கறையோடு நடந்து கொள்வார். அக்காவை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அக்காவின் தீவிர ரசிகை நான். அதுபோல நான் அறிமுகமான அக்னி நட்சத்திரம் திரைப்படம் கூட அக்கா நடிக்க வேண்டியது தான். ஆனால் அவங்க தான் என்னை நடிக்க சொன்னார் அதுபடி நான் நடித்தேன். அந்த திரைப்படத்திற்கு எனக்காக எங்க அக்கா தான் டப்பிங் பேசி இருந்தார் என்று நிரோஷா பேசியிருக்கிறார்.
அதுபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள லால்சலாம் படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றியும் நிரோஷா பெருமையாக பேசி இருக்கிறார். அதில் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை கேட்டபோது நான் எதுவும் சாதாரண ரோலாக இருக்கும் என்று நினைத்து சரி என்று ஒப்புக்கொண்டேன். ஆனால் அதற்கு பிறகு தான் அவர் அப்பாவுக்கு ஜோடியாக நீங்க தான் நடிக்க போறீங்கன்னு சொன்னார்.
அதை கேட்டதும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நான் படப்பிடிப்புக்கு சென்றேன். பிறகு லால் சலாம் படத்தில் நடிக்கிறேன் என்று வீட்டில் சொல்லி இருந்தேன். ஆனால் ரஜினி சாருக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று ஐஸ்வர்யா சொல்லி இருந்தார்.
இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்று அவர் சொன்னது படி அதை ஆரம்பத்தில் என்னுடைய வீட்டில் சொல்லவில்லை. இப்போது அந்த கேரக்டர் வெளியே தெரிந்திருக்கிறது. ஆனாலும் எனக்கு பல வருஷம் கழித்து ரஜினி சாருக்கு ஜோடியாக நடித்தது ரொம்பவே சந்தோஷம் என்று அந்த வீடியோவில் நிரோஷா பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications