மறைந்த கஜினி பட வில்லன்.. பிரதீப்புக்கு கடைசி நேரத்தில் என்ன நடந்தது? கண்கலங்க பேசிய மகள்! ரசிகர்கள் எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கஜினி படத்தில் கொடூர வில்லனாக நினைவில் நிற்கும் நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவு இன்னும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான படங்களிலும் நடித்த அவர் சில நாட்களுக்கு முன்பு ரத்த புற்று நோயால் காலமானார். அவருடைய மறைவு குறித்து திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கடைசி நேரத்தில் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மகள் விக்ரமாதித்யா ராவத் சொன்ன விஷயம் பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது.

பிரதீப் ராவத் மகள் பேட்டி

அவர் பேசுகையில், அப்பாவுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு வழக்கமான மெடிக்கல் செக்கப் செய்தோம். எல்லாம் ரிப்போர்ட்டும் நல்லாவே இருந்தது. அதனால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட போது அது அசாதாரணமான வயிற்று வலியாக தான் இருக்கும் இருக்கும் என்று நினைத்தோம். மருந்துகளும் எடுத்தார். ஆனாலும் உடல் மட்டும் தொடர்ந்து மோசமாகி கொண்டே போனது. அதற்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்தோம்.

அதில் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அரிய வகை ரத்த புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகப்பட்டார்கள். மறுநாளே எடுத்த செக்கப்களில் அது உறுதியாகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள் என பீல் பண்ணி இருக்கிறார்.

Pradeep Rawat Ghajini Villain Daughter

கடைசி நிமிடத்தில் நடந்த சம்பவம்

மேலும் கடைசி தருணத்தை நினைத்து உருக்கமாக பேசிய மகள், அப்பாவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார்கள். நாங்கள் எல்லோருமே வெளியே காத்துக் கொண்டு இருந்தோம். அந்த கட்டத்தில் ஐசியு கதவு திறந்தது. உள்ளே பார்த்தபோது டாக்டர் ஸ் அப்பாவுக்கு சிபிஆர் செய்து கொண்டு இருந்தார்கள். அந்த ஒரு காட்சியை பார்த்தவுடன் என்ன நடக்கப் போகிறது என்பது எனக்கு புரிந்து விட்டது.

Pradeep Rawat Ghajini Villain Daughter

கதறி அழுத குடும்பம்

அம்மா உடனே கதறி அழ ஆரம்பித்தார். அந்த நிமிடத்தை வாழ்க்கையில் மறக்க முடியாது என்று கண்கலங்க பேசினார். மேலும் அப்பா இப்போது இந்த உலகத்தை விட அமைதியான நல்ல இடத்தில் இருப்பார் என்று நம்புகிறேன். இறுதி சடங்குக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதீப் ராவத்தின் மறைவு பாலிவுட்டை மட்டுமல்லாமல் தென்னிந்திய திறை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழக ரசிகர்களுக்கு கஜினி, அசல், டிடி ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் பரீட்சையமானவர். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பலமொழிகளிலும் வில்லன் கேரக்டரில் தனி முத்திரை பதித்திருந்தார். அதுபோல பிரதீப் மறைவு செய்தியை கேட்டவுடன் இயக்குனர் சரண் நேரடியாக மும்பைக்கு சென்று இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

பிரபலங்கள் வருத்தம்

தனது இரங்கல் பதிவில், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் குழந்தை மனசு கொண்டவர். நான் மும்பைக்கு போனால் என் வீட்டில் தங்க வேண்டும் என்று வற்புறுத்துவார். அவருடைய வீட்டில் எனக்கு என ஒரு அறை இருந்தது. மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்துக்காக சம்பளத்தை கூட குறைத்துக் கொண்டார். அஜித் மீது அளவில்லாத மரியாதையை வைத்திருந்தார். இப்படி ஒரு நண்பரை இழந்தது பெரிய வேதனை என்று சொல்லியிருந்தார்.

Pradeep Rawat Ghajini Villain Daughter

ரசிகர்கள் ஆறுதல்

அதுபோல நடிகர் சரத்குமாரும் தனது வருத்தத்தை இரங்கல் பதிவாக தெரிவித்து இருந்தார். திரையில் முரட்டுத்தனமான வில்லனாக பலரின் மனதில் இடம் பிடித்த பிரதீப் ராவத் வாழ்க்கை குடும்பத்தினருக்கு மறக்க முடியாத வலியை விட்டு சென்று இருக்கிறது. தன்னுடைய தந்தையின் கடைசி நேரத்தை கண்கலங்க மகள் சொன்னதை கேட்டு பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+