மறைந்த விஜே சித்ராவை நினைவு இருக்கிறதா? அவர் குறித்து பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த விஜே சித்ரா குறித்து சமூக வலைத்தளத்தில் சின்னத்திரை இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
விஜே சித்ரா கடைசியாக நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குனர் சிவா சேகர் இன்று விஜே சித்ராவின் பிறந்தநாள் குறித்து அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.
தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகையாக கலக்கி கொண்டிருந்த விஜே சித்ராவின் பிறந்தநாளை தற்போது அவருடைய ரசிகர்கள் விமர்சனமாக கொண்டாடி வருகின்றனர். அவர் தற்போது உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளை ரசிகர்களோடு விஜே சித்ரா கொண்டாடி வந்த நிலையில் இன்று அவருடைய போட்டோவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

விஜே சித்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர். இப்ப வரைக்கும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் வெளியே வர முடியாமல் தான் இருந்து வருகின்றனர். ஒரு உறவினர்களை போலத்தான் விஜே சித்ரா அவருடைய ரசிகர்களிடம் பழகி வந்தார் என்று அவருடைய நெருக்கமான பல ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர். தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களுக்கு பதில் கமெண்ட் அனுப்பி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை ஒவ்வொரு பிறந்தநாளிலும் பெற்று வந்த அவர் இந்த பிறந்தநாளில் தனக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று பலர் ஏங்கி போயிருக்கின்றனர்.

ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவருக்காக பல ரசிகர்கள் பரிசுப் பொருள்களை அனுப்பி வருவர். அவர்களுக்கு நன்றி கூறி விஜே சித்ராவும் பதில்களை அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு இனி நடக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் வருத்தத்தோடு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து கூறி அவருடைய போட்டோக்களை வைரலாகி வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் விஜே சித்ராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அந்த வகையில பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் சிவாசேகர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே கடந்த வருடமும் சிவா சேகர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications