பிக்பாஸ் 5 சீசனின் முதல் அப்டேட்க்கே இவ்வளவு அலப்பறையா? ஆர்வத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைக்கும் பல சீசன்களை கடந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகுதான் அலப்பறைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.

பிக்பாஸ் எல்லா சீசனும் ஆரம்பிக்கும் முன்பு வரைக்கும் நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு பலர் ரசிகர்களாக மாறிவிடுவார்கள்.

அதுமாதிரிதான் இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சி பற்றி இருந்த ஆர்வத்தை தூண்டும் விதமாக தற்போது விஜய் டிவி கலக்கல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களையும் நெட்டிசன்களையும் தூண்டி விட்டிருக்கிறது.

எந்த நிகழ்ச்சிகளிலும் அடிச்சுக்க முடியாது

எந்த நிகழ்ச்சிகளிலும் அடிச்சுக்க முடியாது

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் முதன்மை இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பல ரசிகர்களின் நன்மதிப்பையும் பெற்றுவிடுகிறது. இது இந்த சேனலுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றிதான். வெற்றி அதிகமாக இருப்பதால்தான் தொடர்ந்து அந்த நிகழ்ச்சிகளில் பல சீசன்களையும் ஒளிபரப்பி வருகின்றனர். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு முதல் முதலில் ஆரம்பிக்கும் முன்பு பெரும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பை எல்லாம் தூளாக்கி விட்டு பிக்பாஸ் முதல் சீசன் முதல் நான்கு சீசன்கள் வரை வெற்றிகரமாக பட்டையை கிளப்பி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுக்குமே பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கி விட்டனர். ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்று சொல்லும் வகையில் தான் ஒவ்வொரு சீசனும் மெருகேறி வருகிறது.

புதுசு புதுசா அறிமுகம் இருக்கு

புதுசு புதுசா அறிமுகம் இருக்கு

தற்போது கூட இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகப்போகிறது என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் அந்த நிகழ்ச்சியும் விஜய் டிவி நிகழ்ச்சியை போன்று தான் இருக்கப் போகிறதா? இல்லை வித்தியாசமாக இருக்கப் போகிறதா? என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். ஜீதமிழ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்த்த நாளில் இருந்தே விஜய் டிவியில் எப்போது பிக்பாஸ் வரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இதைப் பற்றி தான் பலரும் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். தற்போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு லேட்டஸ்ட் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சஸ்பென்ஸ் தாங்க முடியலையே

சஸ்பென்ஸ் தாங்க முடியலையே

பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருந்தாலும், அதில் யாரெல்லாம் கலந்துக்க போகிறார்கள் என்று தெரியாமல் திணறி வருகின்றனர். ஆளுக்கொரு தினுசாக ஒவ்வொரு கருத்தையும் கூறி வருகிறார்கள். இதில் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை என்றாலும் இவரா இருக்குமோ? அவராக இருக்குமோ? என்று பலர் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தாலும், விஜய் டிவியில் இருந்து இதுவரைக்கும் எந்த ஒரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. எப்போது நிகழ்ச்சி தொடங்கப்படும், அதில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார்? எந்த நேரத்தில் ஒளிபரப்பப்படும்? என்ற கேள்விக்கு எல்லாம் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நேரத்தில் விடை கிடைக்காமல் திணறி வருகின்றனர். அதற்கு எல்லாம் இன்று விடை கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

பொறுத்திருந்து பார்த்தால் புரியும்

பொறுத்திருந்து பார்த்தால் புரியும்

விஜய் டிவியில் லேட்டஸ்ட் ப்ரோமோவில் 5.55 க்கு என்று ஒரு மியூட்டான வீடியோ வைரலாக வலம் வருகிறது. இந்த பரபரப்பான நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியதாகத்தான் இருக்கும் என்று ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் ஐந்தாவது சீசனின் முதல் அப்டேட்டே இது வரைக்கும் இல்லாத வகையில் மாஸாக இருக்கிறது, என்றால் இந்த சீசன் வேற லெவல் தான் இருக்கப் போகிறது என்று இப்போவே கமெண்டுகள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் ஒருபுறம் இதற்காக காத்துக் கொண்டிருக்கும் போது நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு இப்பவே இப்படி பண்ணுறீங்களே நிகழ்ச்சி தொடங்கிவிட்டால் இன்னும் என்ன எல்லாம் பண்ண போகிறார்களோ என்று வடிவேலுவின் காமெடியை போன்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த 5.55 க்கு தான் என்ன நடக்கப் போகிறது என்று தெரியும்.. பொறுத்திருந்து பார்த்தால் தான் புரியும்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+