kodeeswari: ஹனிமூன் போறதுக்காக கோடீஸ்வரி ஹாட் சீட்டில் லாவண்யா டீச்சர்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி ரியாலிட்டி ஷோவில் சேலத்தைச் சேர்ந்த லாவண்யா டீச்சர் ஹாட் சீட்டில் அமர்ந்து பேசுவதை கலர் தமிழ் டிவியில் பாருங்கள். இவர் தன் கணவரோடு ஹனிமூன் போக வேண்டும் என்கிற ஆசையில் கோடீஸ்வரியில் கலந்துக்கொள்ள நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்ததாக கூறுகிறார்.
ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவரும் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பல துறையை சார்ந்த பெண்கள் அவரவர் தனித்திறமை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துக்கொண்டு வருகின்றனர்.
இதன்படி தமிழகத்தின் முதல் கோடீஸ்வரியாக காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஜெயித்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். கலர்ஸ் தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

லாவண்யா டீச்சர்
சேலத்தைச் சேர்ந்த லாவண்யா டீச்சர், கணவரோடு தேனிலவு போக வேண்டும் என்று கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்து தேர்வாகி இருக்கார். இவர் ராதிகாவைக் கண்டவுடனே ரொம்பவும் எக்ஸைட்டாகி ராதிகாவின் கையைப் பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார். ரொம்ப எக்ஸைட்டாக இருக்கீங்களே என்று ராதிகா கேட்க, யெஸ் ...யெஸ் என்று சொல்கிறார் லாவண்யா.

கண்மணி அன்போடு
கோடீஸ்வரி சீட்டில் உட்காருபவர்களுக்கு கண்மணிஆப்ஷன்தான் எல்லாமே. கண்மணி ஆன்சரை லாக் பண்ணு என்றால் கண்மணிதான் செய்யும். அது நேரம் கண்மணி டிக் டிக் டீச்சர் என்றால் அதற்கான ஆப்ஷனையும் கண்மணி தரும். டைமர் ஆஃப் பண்ணுவது, ஆன் பண்ணுவது எல்லாமே கண்மணிதான். இந்த கண்மணியை தாஜா செய்து வச்சுக்கணும் என்று லாவண்யா கண்மணி அன்போடு என்று ஒரு பாடலை புனைந்து பாடுகிறார்.

லாவண்யா பாடல்
கண்மணியை தாஜா பண்ணி வச்சுக்கணும். அதுக்கு ஒரு பாடல் பாட ஆசைப்படுறேன்னு சொன்னார் லாவண்யா. பாடுங்க என்று ராதிகா சொல்ல, கண்மணி அன்போட கண்டெஸ்டண்ட் நான் எழுதும் விண்ணப்பமே.. என் மூளை வளர்த்துக்கொள்ள இது ஈஸி கேள்வி அல்ல, அதையும் தாண்டி கடினமானதே என்று லாவண்யா பாட, அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க ராதிகா அபிராமி அபிராமி என்று கூறி சிரித்தார்.

கலகலப்பு நிகழ்ச்சி
இப்படி திருமதி ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வரும் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சி ரொம்ப கலகலப்பு, பல அறிவார்ந்த விஷயம்.. பல துறையையும் சார்ந்த பெண்களின் பங்கேற்பு என்று திங்கள் முதல் வெள்ளி வரை சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டு இருக்கிறது. பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியை பெண்கள் பெருமைப்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் நன்றாக பயன்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications