விவாகரத்துக்கு காரணமே இதுதான்! சாய்ராவின் வழக்கறிஞர் கொடுத்த விளக்கம்..! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு சார்பாக வழக்கறிஞர் வந்தனா ஷா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து விவாகரத்து பற்றி பேசி இருக்கும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் யாரும் எதிர்பார்க்காத வகையில் விவாகரத்து செய்தியை அறிவித்து வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்த சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்து இருந்தார். அதுபோல தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்து விட்டதாக கூறியிருந்தார். ஜிவி பிரகாஷ் சைந்தவியை பிரிந்து விட்டதாக அறிக்கை வெளியிட்டார்.

சமீபத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தியை பிரிந்து விட்டதாக கூறியிருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மனைவி சாய்ரா ஏ ஆர் ரகுமானை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து ரஹ்மானும் அந்த செய்தியை உறுதிப்படுத்தி இருந்தார்.
நேற்றையிலிருந்து ஏ ஆர் ரஹ்மான் சாய்ரா விவாகரத்து செய்திதான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பேசிய பேட்டிகள் கூட இப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இசைப்புயல் என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய புயலா என்பது பலருடைய கேள்வி.
பலருடைய காதலுக்கு தூது சொல்லும் பாடல்களை உருவாக்கிய ஏ ஆர் ரஹ்மான் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனையா? என்றும் பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். விவாகரத்து என்பது சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களின் முடிவு. அவர்கள் இதை ஒரே நாளில் எடுத்திருக்க மாட்டார்கள். பல நாட்கள் யோசித்து தான் இந்த முடிவு எடுத்திருப்பார்கள். அதனால் அதைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று ரஹ்மானின் ரசிகர்களும் கருத்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சாய்ரா அவருடைய கணவர் ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதை பற்றி வழக்கறிஞர் வந்தனா தான் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வந்தனா விவாகரத்து குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதில் பிரபலங்களின் திருமண வாழ்க்கையில்.. அதிலும் பாலிவுட் விவாகரத்துக்கு காரணம் கள்ள தொடர்பு கிடையாது.
போர் அடிப்பது தான் காரணமாக இருக்கும். பிரபலங்கள் ஒருவரை திருமணம் செய்து போரடித்தவுடன் அவரை பிரிந்து மற்றொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். one night stand எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. போரடிப்பதால் தான் உறவுகள் முறிந்து போகிறது. பிரபலங்களின் வாழ்க்கை வித்தியாசமானது.
சினிமா பிரபலங்கள் மட்டுமல்ல பெரும் பணக்கார குடும்பங்களிலும் இது நடக்கிறது. கணவர் அல்லது மனைவியின் அப்பா, சகோதரர், மாமனார் ஆகியோரால் பிரபலங்களின் வாழ்க்கையில் சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதனை பொதுவாக கூறினேன்.. என்று அவர் அதில் பேசியிருக்கிறார்.
அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிகமான விவாகரத்து எதனால் நடக்கிறது என்று பல வீடியோக்களில் பேசியிருக்கிறார். இதுவரைக்கும் வந்தனா யார் என்று தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட இப்போது இவர் யார் என்று அதிகமாக தேடி பார்க்கிறார்கள்.
சமீராவின் வழக்கறிஞராக இவர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து இவர் பேசிய பழைய வீடியோக்களையோடு ஏஆர் ரஹமான் மற்றும் சமீராவின் வாழ்க்கையை தொடர்பு படுத்தியும் சிலர் பேசி வருகிறார்கள். ஏ.ஆர் ரஹ்மானின் மூத்த மகளுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
அந்த திருமணத்தில் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் நேற்று ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா இருவரும் தங்களுடைய விவாகரத்து செய்தியை இணையத்தில் பதிவிட்டதும் அவருடைய மூத்த மகள் கையெடுத்து கும்பிடுவது போன்ற எமோஜி பகிர்ந்து இருக்கிறார். அதுபோல ஏ.ஆர் ரஹ்மானின் மகன் இந்த விஷயத்தில் யாரையும் விமர்சிக்காதீர்கள். எங்களுக்கு பிரைவேசி தாருங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications