லியோ திரைப்படத்தில் நடிகை வனிதாவின் மகன்.. இதை கவனித்தீர்களா? ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: நேற்றைய தினம் பெரும் எதிர்பார்ப்போடு நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் சர்வதேச அளவில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல பிரபலங்கள் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.
திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் முதல் நாளே வசூலில் சாதனையை செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகை வனிதாவின் மகனான ஸ்ரீஹரி திரைப்படத்தில் இருக்தும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அது பற்றி பார்ப்போம்.
நடிகர் விஜய், திரிஷா, மிஸ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், மடோனா, ஜனனி பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என பல பிரபலங்கள் இணைந்து நடித்த லியோ திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக பல திரைப்பட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக பல மாதங்களாகவே ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
கடைசி நேரத்தில் திரைப்படம் வெளியிடுவதில் பல சர்ச்சைகள் வந்திருந்தது.ஆனாலும் அதையெல்லாம் மீறி நேற்று வெற்றிகரமாக வெளியாகி இருக்கிறது அதை தொடர்ந்து தற்போது பல தியேட்டர்களில் வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கிறது. இப்படியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் குறித்து விமர்சனங்களை பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் நடிகை வனிதாவின் மகனான ஸ்ரீஹரி ஒரு காட்சியில் இடம் பிடித்திருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீஹரி தன்னுடைய அம்மாவான வனிதாவை பிரிந்து தன்னோட தந்தையோடு இருக்கும் நிலையில் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது அவரை மடியில் வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றை பயன்படுத்தி இருக்கின்றனர்.அதாவது இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய், நடிகர் அர்ஜுனிடம் நான் லியோ இல்லை என்பதை நிரூபிப்பதற்காக புகைப்படம் சிலவற்றை காட்டுகிறார்.
அதில் தன்னுடைய மகனின் முதலாவது பிறந்தநாள் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை காட்டுகிறார். அது ஸ்ரீஹரியோடு விஜய் எடுத்த புகைப்படம் தான்.தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அதை நேரத்தில் ஸ்ரீஹரி சில குறும்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகனாவதற்கு தகுதியாக இருக்கும் அவருக்கு சீக்கிரமாக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்ற திரைப்படத்திலும் கார்த்தியின் சிறு வயது கேரக்டராக ஸ்ரீஹரி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் லியோ திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications