ஓ.டி.டி..யால் உலக பேமஸ் ஆன ரஞ்சித்...பிரம்மாண்ட படங்களை பின்னுக்கு தள்ளிய நம்ம ஊரு திரைப்படங்கள்
சென்னை: 2021ஆம் ஆண்டு உண்மையாகவே ஓடிடி ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டாகவே இருந்துள்ளது. படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாளிலே ஓடிடியில் வந்தாலும், நேரடியாக ஒடிடி யில் ரிலீசான படங்கள் பெரும் வெற்றியையும் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
அந்த அளவில் ஓடிடியில் நேரடியாக ரிலீஸான ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான "சார்பட்டா பரம்பரை" படமும், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான "மின்னல் முரளி" மலையாள படமும் உலக அளவில் ஒடிடி ரேங்க் பட்டியலில் சாதனை படைத்துள்ளது.

நேரடியாக ஒடிடியில் ரிலீசான படங்கள்
பெரிய பெரிய படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும் "ஓவர் த டாப்"(OTT)எனப்படும் ஒடிடி பிளாட்பார்மில் படங்களை ரிலீஸ் செய்வது உலக அளவில் தவிர்க்க முடியாததாகவும், திரைப்பட முதலீட்டாளர்களுக்கு எளிதான வியாபாரமாக மாறிக்கொண்டிருக்கிறது.ஒடிடி ரிலீஸ் பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு குறைந்த செலவில் உலக அளவில் விளம்பரத்தையும் பார்வையாளர்களையும் பெற்றுத்தரும் கருவியாக ஓடிடி உள்ளது.அமேசான்,நெட்ப்ளிக்ஸ் ஹாட்ஸ்டார் ,போன்ற மிகப்பெரிய ஓடிடி தளங்கள் சிறிய படங்கள் மட்டுமின்றி பெரிய படங்களையும் தங்களது ஒடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய பெரிய அளவு முதலீடு செய்து எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்திய சினிமா சாதனை
ஒவ்வொரு ஆண்டு ரசிகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஓடிடி யில் ரிலீசாகும் படங்களை வரிசைப்படுத்தும் லெட்டர் பாக்ஸ் நிறுவனத்தின் பட்டியலில்
கடந்த வருடம் இந்திய சினிமாக்கள் இரண்டு 'டாப் 10'ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. டாப் 10ல் சார்பட்டா பரம்பரை மூன்றாவது இடத்தையும் மின்னல் முரளி படம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது.
Recommended Video

டாப் 10 திரைப்படங்கள்
மிகப்பெரிய பொருட்செலவில் உலக அளவில் பிரபலமான ஹீரோக்கள் நடிப்பில் வெளியான உலகளாவிய படங்களுக்கு மத்தியில் இந்திய படங்கள் இரண்டு இடம் பிடித்திருப்பது இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்துள்ளது .ஏனைய படங்கள் முறையே ..டாம் ஹாலண்ட் நடித்த ' ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் ' (ரேங்க் 1), டெனிஸ் வில்லெனுவின் ' டூன் ' (ரேங்க் 2), ரிட்லி ஸ்காட்டின் 'தி லாஸ்ட் டூயல்' (ரேங்க் 4), 'தி கிரீன் நைட்' (ரேங்க் 5), மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்' (ரேங்க் 6), மற்றும் ஜேம்ஸ் கன்னின் 'தி சூசைட் ஸ்குவாட்' (ரேங்க் 8) இடங்களைப் பெற்றுள்ளது.

உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்
லெட்டர்பாக்ஸில் மேற்கூறிய தரவரிசை, 'தி லாஸ்ட் டூயல்', 'ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்' மற்றும் 'தி சூசைட் ஸ்குவாட்' உள்ளிட்ட பிரீமியம் ஹாலிவுட் திரைப்படங்களை 'சர்பட்ட பரம்பரை' விஞ்சியுள்ளது. மேலும், 'சர்பட்ட பரம்பரை' மற்றும் 'மின்னல் முரளி' மற்ற ஆக்ஷன் ஹாலிவுட் படங்களான 'நோ டைம் டு டை', 'வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்', 'பிளாக் விடோ' மற்றும் 'ஃப்ரீ கை' போன்றவற்றையும் பின்னுக்குத் தள்ளி இந்த இடத்தைப் பெற்றுள்ளது. இது இந்திய சினிமாவிற்கு உலக அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சினிமா விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications