சிம்புவுக்கு உருவாக்கப்பட்டது தான் "லெவன்” படம்.. ஆனால் இதனால் தான் நடிகர் மாற்றம்! ஓபனாக பேசிய இயக்குனர்
சென்னை: சமீபத்தில் வெளியாகி நல்ல பாராட்டை பெற்று வரும் "லெவன்" திரைப்படம் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் சிம்புவுடன் நடிக்க வைக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும், ஆனால் எதனால் அது நிறைவேறவில்லை என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் தொடங்கிவிட்டது. கடந்த ஆறு மாதங்களாக வெளியான திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் குற்ற திரில்லர் திரைப்படங்களில் ஒன்றான லெவல் திரைப்படம் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் கடைசியில் வில்லனாக இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதோடு அந்த திரைப்பட கதையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

லெவன் திரைப்பட இயக்குனர்
இந்த திரைப்படத்தின் கதை இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்துமே பல ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தை எழுதி இயக்கியது லோகேஷ் அஜில்ஸ் என்பவர் தான். இதற்கு முன்பு இவர் குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸின் மூலம் கவனம் பெற்று இருக்கிறார். லெவன் திரைப்படம் மூலமாக தன்னுடைய இயக்க திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா மற்றும் ரேயா ஹரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இமான் இசையமைத்த படம்
அதிலும் போலீஸ் ஆபீஸராக நவீன் சந்திரா அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதுபோல இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்திருக்கிறார். அவர் தனக்கே உரிய முத்திரையை அந்த படத்தில் முழுக்க காட்டி இருக்கிறார். முக்கிய காட்சிகளில் இசை திரைப்படத்தின் அதிர்ச்சியையும், மர்மத்தையும் சிறப்பாக வெளிக்கொண்டு வருவதற்காக உதவியது.
சிம்புவுக்காக எழுதிய கதை
அதோடு பார்க்கும் ரசிகர்களையும் அந்த படத்தோடு ஒன்றினைத்து வைத்ததில் இசையின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் சொன்ன விஷயம்தான் பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அதாவது இந்த திரைப்படத்தின் கதையை ஆரம்பத்தில் நாங்கள் சிம்புக்காகவே எழுதினோம். அவருடைய மாறுபட்ட நடிப்பு பணி மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் இந்த கதைக்கே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவரிடம் என்னால் பேச முடியவில்லை.

தவறி போன வாய்ப்பு
அவரை எப்படி தொடர்பு கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. அதனால் தான் அந்த கூட்டணி எங்களால் உருவாகாமல் போய்விட்டது. இந்த ஒரு வாய்ப்பு எங்களுக்கு தவறிபோனாலும் எதிர்காலத்தில் அவருடன் இணைந்து கண்டிப்பாக நான் ஒரு படத்தை இயக்குவேன். அது எனக்கு மிகப்பெரிய விருப்பமாக இருக்கும் என்று அந்த பேட்டியில் லோகேஷ் கூறி இருக்கிறார். இதை சிம்புவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications