அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கெடச்சா.. திருமணத்தில் உருகிய ரவீந்தர்
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
ரவீந்தர் சந்திர சேகரன் தன்னுடைய திருமண நாளில் தன்னுடைய மனைவியை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

களைகட்டும் திருமணம்
ஆவணி மாதம் பிறந்ததும் திருமண வைபோகம் களைகட்ட தொடங்கி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த மாதத்தை தேர்ந்தெடுத்து திடீர் திருமணங்கள் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்க செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தாலும் தற்போது இவர்கள் இருவரும் இரண்டாம் திருமணம் செய்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

வியப்பை கொடுத்த திடீர் திருமணம்
லிப்ரா புரொடக்ஷன் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் பலருக்கும் பிரபலமான நபராக இருந்து வருகிறார். திரைப்படங்களில் இவர் பிஸியாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து பலருடைய நெகட்டிவ் கமாண்டுகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி தனக்கென்று ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். தற்போது ரவி சந்திரசேகரன் விடியும் வரை காத்திரு என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய திடீர் திருமணம் பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

சின்னத்திரை நடிகை
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தற்போது சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ரவீந்தர் தயாரிக்கும் திரைப்படமான விடியும் வரை காத்திரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார் என்ற செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் இருவரும் திருமணம் செய்த செய்தியை தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கின்றனர்.

பொங்கும் காதல் பதிவு
சின்னத்திரையைச் சார்ந்த புகழ் தன்னுடைய திருமணத்தை திடீரென்று எளிமையாக முடித்தது போல தற்போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் எளிமையாக திருமணத்தை முடித்து இருக்கின்றனர். திருமண புகைப்படத்தை ரவீந்தர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க... ஆனா, அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா... குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!' எனப் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications