பிக் பாஸ் தமிழ் 10ல் உதட்டு முத்தம்.. வரம்பு மீறிய நடிகைகள்.. கடுப்பான சக போட்டியாளர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10ல் அன்ஷிதா மற்றும் ஷாதிகா இருவரும் உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ தான் இணையத்தில் வைரலகி வருகிறது. அதில் இவர்கள் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டதை பார்த்து கடுப்பான லக்ஷ்மி பிரியா திட்டி தீர்த்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு திட்ட தொடங்கி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பார்க்கிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக கெட்ட வார்த்தை பேசக்கூடாது, அரைகுறை ஆடையை அணியக்கூடாது என்றெல்லாம் ரசிகர்கள் சொல்லி வந்தனர். ஆனால் அதற்கு விஜய் சேதுபதி, உங்கள் கையில் தானே ரிமோட் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சேனலை மாற்றிவிடலாம் அல்லது டிவியை ஆஃப் பண்ணிவிடலாம் என்று சொன்னதும் பெரிதாக பேசப்பட்டது.

அப்போ கண்டித்த கமல்ஹாசன்
இதற்கு முந்தைய சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போது தலைமுடிக்கு கூட இன்னொரு வார்த்தையில் பேசிய காயத்ரி ரகுராமை திட்டிமிட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சி அதனால் கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது என்று சொல்லி இருந்தார். ஆனால் இப்போது சீசனில் எல்லாம் கெட்ட வார்த்தைகளுக்கு மியூட் போடப்படுகிறது. அதையும் மீறி சில இடங்களில் கெட்ட வார்த்தை லைவில் அப்படியே வந்து விடுகிறது.

உதட்டில் முத்தம்
ஆனால் இப்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று அன்ஷிதாவும் ஷாதிகாவும் உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறார்கள். அப்போது திடீரென இதை பார்த்த லட்சுமி பிரியா கடுப்பாகி, என்ன கண்றாவி.. என்னடி பண்ணுறீங்க? என்று திட்டி இருக்கிறார். லைவில் இந்த காட்சி அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டதால் இதை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இது என்ன மருத்துவ முத்தம்மா? இப்படி உதட்டில் முத்தம் கொடுக்குறீங்க? என்று சிலர் கிண்டல் செய்கின்றனர். இன்னும் ஒரு சிலர் இவர்களுக்கு சப்போர்ட்டாகவும் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். இப்போ உதட்டு முத்த காட்சிகளை வைத்து ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
