DC ott: ஓடிடியில் வெளியாகும் லோகேஷ் கனகராஜின் டிசி.. அதுவும் எப்போ, எதில் தெரியுமா?
சென்னை: இயக்குனராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் திடீரென ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம் தான் டிசி (DC). அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்த படம் வெளியான போது இருந்த எதிர்பார்ப்பை தாண்டி லோகேஷின் நடிப்பு மற்றும் படத்தில் வித்தியாசமான கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இப்போது இந்த படத்தை பற்றிய ஓடிடியை அப்டேட் வெளியாகி இருக்கிறது.
டிசி படத்தில் ஓடிடி ரிலீஸ்
அதாவது ஆகஸ்ட் 7ம் தேதி தியேட்டரில் ரிலீஸான டிசி தற்போது தனது அடுத்த பயணத்துக்கு தயாராகிவிட்டது. அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் டிசி ஸ்ட்ரீம் ஆகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தை பார்க்கலாம் என்று சன் நெக்ஸ்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் என்றாலே மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ என தொடர்ந்து ஆக்சன் படங்களை கொடுத்த இயக்குனர் என்று தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் டிசியில் அந்த இயக்குனர் கேமராவுக்கு பின்னாடி மட்டும் இல்ல நான் முன்னாடியும் என்னால ஹீரோவாக நிற்க முடியும் என்று நிரூபித்து விட்டார். இந்த படத்தில் தேவதாஸ் என்ற கேரக்டரில் லோகேஷ் நடித்து இருந்தார். இயக்குனராக பல ஹீரோக்களை மாஸ் ஹீரோவாக காட்டியவர் தன்னை ஒரு ஹீரோவாக எப்படி காட்டியிருக்கிறார் என்பதுதான் படத்தின் முக்கியமான சுவாரஸ்யம்.
டிசி வசூல் நிலவரம்
டிசி திரைப்படம் பிரபல எழுத்தாளர் சரத் சந்திர சட்டேபாத்யாவின் தேவதாஸ் நாவலை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும் அதை அப்படியே சினிமாவாக எடுக்கவில்லை. அருண் மாதேஸ்வரன் தனது பாணியில் அந்த கதையை முற்றிலுமாக ஒரு இருண்ட உலகத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறார். தேவதாஸ் என்று கேரக்டரில் வரும் லோகேஷின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் முக்கியமான இடத்தை பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவராக வாமிகா கபி சந்திரா கேரக்டரிலும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

ஓடிடி அப்டேட்
இப்போது ஓடிடி ரிலீஸ் அறிவிப்புக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தியேட்டரில் வெளியான பிறகு டிசி உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான வசூலித்ததாக பட குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் லோகேஷ் முதல் ஹீரோ படமே 100 கோடி வசூல் படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதனால் தியேட்டரில் படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் லோகேஷ் ஹீரோவாக எப்படி நகருகிறார் என்பதை தெரிந்து கொள்ள காத்திருப்பவர்களுக்கும் செப்டம்பர் 4 முக்கியமான தேதியாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications
