கிணத்துக்கடவு தொகுதியை கேட்ட இயக்குனர் யார்? உடைத்த புஸ்ஸி ஆனந்த்! லோகேஷ் கனகராஜ் சொன்ன விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் இடம் ஒரு தொகுதிக்கு பிரபல இயக்குனர் சீட்டு கேட்டதாக சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசியது சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பேசு பொருளாக இருந்தது. குறிப்பாக அந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஆனால் அதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் கொடுத்த விளக்கம் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்ற போது அமைச்சர் புஸ்ஸி அனந்த் பேசுகையில், தேர்தல் நேரத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் முதலமைச்சர் விஜய்யிடம் ஒரு தொகுதியை கேட்டார். இயக்குனர் கேட்ட தொகுதியில் ஏற்கனவே ஒருவர் நீண்ட காலமாக கட்சி பணியாற்றி வருவதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறி இருந்தார்.

புஸ்ஸி ஆனந்த் சொன்ன இயக்குனர்

புஸ்ஸி ஆனந்த் இந்த விஷயத்தை சட்டப்பேரவையில் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த வேளாண் துறை அமைச்சர் வினோத் கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ விக்னேஷை சுட்டிக்காட்டி இருந்தார். அந்த காட்சி வீடியோவும் சோசியல் மீடியாவில் பரவியது. அவ்வளவுதான் அடுத்த நிமிடமே நெட்டிசனின் கவனம் அந்த இயக்குனர் யார் என்பதில் திரும்பியது. கிணற்றுக்கடவு பகுதியில் தொடர்புடைய பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான், அவர்களுடைய சொந்த ஊர் அது என்பதால் அப்போ லோகேஷ் கனகராஜ் தான் விஜய்யிடம் சீட்டு கேட்டாரா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.

Lokesh Kanagaraj Bussy Anand Vijay

லோகேஷ் கனகராஜ் விளக்கம்

இந்த சம்பவத்தை பற்றி சமீபத்தில் லோகேஷ் கனகராஜிடம் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் ஏங்க அதை கேட்க வேண்டும்? நமக்கு அதெல்லாம் செட் ஆகாதுங்க. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. அது வேற யாராவது இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் அவர் பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு இப்போது அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார்.

உடனே ரசிகர்கள் அப்போ அந்த இயக்குனர் யாராக இருக்கும்? என்று அடுத்த தேடலை தொடங்கி விட்டார்கள். சரி அது யாராக இருந்தா என்ன? இப்போ அதுவா முக்கியம்? என்று உங்க மனசு சொன்னால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சில ரசிகர்கள் அந்த இயக்குனர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+