நான் கண்டக்டர் மகன்! நடிகர் ஸ்ரீ நடித்த அந்த கேரக்டர் என்னுடைய நிஜ லைஃப்.. லோகேஷ் கனகராஜ் உருக்கம்
சென்னை: கிணத்துக்கடவு எனும் சிறிய கிராமத்தில் இருந்து, எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல், இன்று கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சினிமாவுக்கான அவரது பயணம், கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்து, பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது.
ஒரு சாதாரண மனிதனின் கதை
லோகேஷ் கனகராஜ் ஒரு பேருந்துக் கண்டக்டரின் மகன்; அவரது தாயார் இல்லத்தரசி. தனது குடும்பத்தைப் பற்றி அவர் அதிகம் வெளிப்படுத்த விரும்புவதில்லை என்றாலும், சிறிய கடையில் இருந்து மெல்ல மெல்ல நிதி நிலைமையை மேம்படுத்திய ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை அவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. "எனக்கு என்ன வேணும்கிறது எனக்கே தெரியாது," என்று கோபிநாத் நடத்திய நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

கோயம்புத்தூரில் உள்ள PSG கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்தது, பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் MBA முடித்தது என அவரது கல்விப் பயணம், சினிமாவை நோக்கி நேரடியான பாதையில் அமையவில்லை. சினிமா துறைக்கு வருவதற்கு முன், லோகேஷ் வங்கியில் பணியாற்றியுள்ளார்.
நகரப் பிரம்மாண்டமும், சினிமா கனவும்
"கோயம்புத்தூருக்கு வந்ததே தனக்கு பெரிய அனுபவமாக இருந்தது," என்று லோகேஷ் குறிப்பிடுகிறார். பின்னர் சென்னை போன்ற மெட்ரோ நகரத்திற்கு வந்தபோது, "எதுவுமே தெரியாம இருந்துட்டோமேங்கிற மாதிரி ஒரு பீல்தான் இருந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார். தனது 'மாநகரம்' படத்தில் வரும் ஸ்ரீ கதாபாத்திரத்தைப் போலவே, தானும் நகரத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரண்டு போனதாக லோகேஷ் கூறினார். இந்தத் தனிப்பட்ட அனுபவமே தனது திரைப்படங்களில் வரும் எதார்த்தமான சித்தரிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, தனது ஆர்வம் சினிமாவை நோக்கித் திரும்பியது. குறும்படப் போட்டிகள்தான் இவரை சினிமாவுக்குள் கொண்டு சென்றன. "சினிமாவுக்கு வருபவர்களுக்குப் பள்ளி, கல்லூரிகளிலேயே நாடகம், மேடைப் பேச்சு போன்ற கலைத் தொடர்புகள் இருக்கும். ஆனால் தனக்கு அப்படிப்பட்ட பின்னணி இல்லை. இதுவே எனது பயணத்தை மேலும் தனித்துவமாக்கியது," என்று லோகேஷ் குறிப்பிட்டார். சினிமாப் பின்னணி இல்லாத ஒரு சராசரி மனிதனும் தன் கனவுகளை அடைய முடியும் என்பதற்கு லோகேஷ் ஒரு வாழும் சான்று.
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்
'மாநகரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், குறுகிய காலத்திலேயே 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அவரது திரைப்படங்கள் தனித்துவமான திரைக்கதை, அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்களுக்காகப் பாராட்டப்படுகின்றன. குறிப்பாக, 'விக்ரம்' படத்தின் மூலம் 'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்' (LCU) என்ற ஒரு தனி உலகத்தைப் படங்களுக்குள் உருவாக்கி, இந்தியத் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்து, இன்று ஒரு பான்-இந்தியா இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜின் பயணம், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு கனவாகவும், உத்வேகமாகவும் அமைந்துள்ளது.
-
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications