Coolie: அனிருத்தும், லோகேஷும் இணைந்து செய்யும் ராக் மேஜிக்.. இப்பவே அலப்பறையை தொடங்கிட்டாங்களே!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தற்போது தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'கூலி' படத்தின் வெளியீட்டிற்காக முழுவீச்சில் தயாராகி வருகிறார். ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் முதன்முறையாக இணையும் படம் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் - அனிருத்: நான்காவது பயணம்
லோகேஷ் கனகராஜும், ராக்ஸ்டார் அனிருத்தும் 'கூலி' படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்தன. அதேபோல, 'கூலி' படத்திற்காக அனிருத் இசையமைத்த பாடல்களும், குறிப்பாக "மோனிகா" பாடல், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "நாங்கள் எங்கள் பயணத்தை ஒன்றாக தொடங்கிய இடத்தில் இருந்து இங்கே நாங்கள் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம். ஒவ்வொரு முறையும் அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. அனிருத் எனக்கு சகோதரனை தாண்டி ஒரு புனிதமான உறவு எங்கள் இடையே இருக்கின்றது. ராக் ஸ்டார் அனிருத் அசத்துவோம்," என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு, படத்திற்கான பின்னணி இசை வேலைகள் முடிந்துவிட்டது குறிப்பதாகத் தெரிகிறது.
ரஜினியின் மாஸ் பிஜிஎம்
அனிருத், தனது வழக்கப்படி, பட வெளியீட்டிற்கு முன் எமோஜி ட்வீட் போட மாட்டேன் என்றும், ஆனால் 'கூலி' படத்திற்கு "10/10, 10 ஃபயர் வச்சிக்கலாம்" என்று பேசியது, படத்தின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. ஏற்கனவே 'விக்ரம்', 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' படங்களில் சிறப்பான பின்னணி இசை அமைத்துள்ள அனிருத், 'கூலி' படத்தில் ரஜினிகாந்திற்கு எந்த மாதிரியான மாஸ் பிஜிஎம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கூலி' ஆடியோ வெளியீட்டு விழா
'கூலி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படக்குழுவினர் பலரும் படத்தின் அனுபவங்கள் குறித்துப் பேசினர்.
ரஜினிகாந்த்: "லோகேஷ் கனகராஜ் ஒரு சிறந்த இயக்குநர். அவரது இயக்கத்தில் நடித்தது, எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, நிச்சயம் திருப்தி அடைவார்கள்," என்று கூறினார்.
லோகேஷ் கனகராஜ்: "ரஜினிகாந்த் சாருடன் இணைந்து பணியாற்றியது, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. 'கூலி' திரைப்படம், ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்த ஒரு படமாக இருக்கும்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸ்ருதிஹாசன்: இந்தப் படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், "ரஜினிகாந்த் சாருடன் நடித்தது, எனக்குப் பெருமையாக இருக்கிறது. லோகேஷ் சார் ஒரு சிறந்த இயக்குநர். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்," என்று கூறினார்.
'கூலி' படத்தில் ரஜினியுடன் அமீர்கான், நாகார்ஜூனா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம், நிச்சயம் ஒரு பெரிய வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications