லொள்ளு சபா ஜீவாவின் வீடா இது.. இத்தனை வசதிகள் இருக்கிறதாம் சந்திரமுகி பேலஸ்க்கு டப் கொடுக்கும் போல
சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜீவா தன்னுடைய ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
காரைக்குடியில் இருக்கும் ஜீவாவின் வீட்டை பார்த்த பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தன்னுடைய பாரம்பரியமான வீட்டின் மதிப்பு பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது பற்றி பல தகவல்கள் விரிவாக பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சந்தானம் முதல் யோகி பாபு வரை லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் தான். இவர்களோடு கலக்கிய நடிகர் ஜீவாவும் ஒருவர்.
ஜீவா லொள்ளு சபா நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக விஜய் நடித்த குருவி, ஆர்யா நடித்த மதராஸ் பட்டினம், சுந்தர் சி நடிப்பில் வெளியான முரட்டுக்காளை உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். பிறகு சினிமா வாய்ப்புகள் வராததால் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மீனாட்சி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

இந்த சீரியலிலும் இவருடைய நடிப்பு பலருடைய பாராட்டை பெற்று இருந்தது. இந்த சீரியலிலும் ஒரு காமெடியான கதாநாயகனாக இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் லொள்ளு சபா ஜீவா நடித்த எங்க வீட்டு மீனாட்சி சீரியல் களுக்காக போடப்பட்ட காரைக்குடி வீட்டின் பிரம்மாண்ட செட்டில் ஹோம் டூர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஜீவா காரைக்குடியை பூர்விகமாக கொண்டவர்தான். காரைக்குடியில் உள்ள இவருடைய வீட்டை தான் இவர் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவில் ஜீவா நடித்த எங்க வீட்டு மீனாட்சி சீரியல்காக போடப்பட்ட ஹோம் டூர் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும் சின்ன வீட்டுக்கு இணையாக இருக்கிறது. வீட்டிற்குள்ளேயே பெரிய நடைபாதையும் காற்றோட்டமான பல அறைகளும் இருக்கிறது. அரண்மனைகளுக்கு சவால் விடும் அளவில் இந்த வீடு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவில் தான் முடியும் அளவிற்கு இவருடைய வீடு இருக்கிறது. அந்த அளவிற்கு வீடு பெரியதாக இருக்கிறது. வீட்டில் ஹாலில் அவருடைய முன்னோர்களின் புகைப்படங்களும் இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் வீடு முழுக்க அங்கே இங்கேயுமாக பல பாரம்பரிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதோட மதிப்பு மட்டும் குறைந்தது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜீவா, காரைக்குடியில் எங்களுடைய குடும்பம் பெரிய தலைக்கட்டு. இங்கே பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் இருக்கும். திருட வந்தால் கூட ஒரு மாதம் உட்கார்ந்து சமைத்து சாப்பிட்டு விட்டு திருடலாம் என்று அவருக்கே உரிய நக்கலோடு கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடு பற்றி சமூக வலைதளத்தில் அதிகமானோர் பேசி வருகிறார்கள்.
-
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏமாந்து நிற்கும் சீரியல் நடிகை.. கதறி அழுது வெளியிட்ட வீடியோ! வெளிவந்த ரகசியங்கள் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications