லொள்ளு சபா ஷேசு ஞாபகம் இருக்கா? ஏழைப் பெண்களுக்காக இப்படி ஒரு உதவியா?அந்த டயலாக் பொருந்தும் தான்
சென்னை: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஷேசு பல ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை சரி இல்லாமல் இருந்த நிலையிலும் தன்னால் முடிந்த உதவிகளை பல பேருக்கு செய்து கொண்டு இருக்கிறார்.
தான் இந்த வருடத்திற்குள் குறைந்தது ஆறு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்திற்கு பிரபலமடைந்த ஷேசு முதன்முதலாக துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறையில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் அந்த திரைப்படங்களில் சின்ன வேடமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து இவருக்கு பிரபலம் கிடைத்தது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தான்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் இவருடைய டைமிங் காமெடி மூலமாகவே இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதிலும் குறிப்பாக சந்தானத்தோடு இவர் A1 திரைப்படத்தில் நடித்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது. அதிலும்," நான் யாருன்னு என்கிட்ட கேட்கிறதை விட, வேற யாருகிட்டயாவது போய் நான் யாருன்னு கேட்டு பாரு.. அச்சச்சோ அவரா பயங்கரமான ஆளாச்சே.! அவர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா என்று சொல்லுவாங்க..." என்னும் டயலாக் வேற லெவலில் டிரெண்டானது.
அது போன்று பல திரைப்படங்களிலும் இவருடைய காமெடி பல பேரை ரசிக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான வடிவேல் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் இவர் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ச்சியாக லொள்ளு சபா, காமெடி பேட்டை என்ற நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் பல பேருக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த மாதிரி தான் தற்போது ஏழைப் பெண்கள் பலருடைய திருமணத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை தன்னுடைய நண்பர்கள் மூலமாகவும் பெற்று செய்து கொண்டிருக்கிறார். அது பற்றி சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். தனக்கு இதை செய்வதற்காக நடிகர் சந்தானம், யோகி பாபு போன்ற உதவி செய்து கொண்டிருப்பதாகவும் அதில் கூறியிருக்கிறார்.
அதோடு இந்த வருடத்தில் நான் எப்படியும் ஆறு பெண்களின் திருமணத்திற்காவது உதவி செய்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக என்னுடைய நண்பர்கள் பலர் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications