சேஷுவ பார்க்க தான் நாங்க வந்துட்டு இருந்தோம்.. அதற்குள் இப்படி! பேச முடியாமல் கண்கலங்கிய மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (மார்ச் 26) காலமாகி இருக்கிறார். அது குறித்து ரசிகர்களும் பிரபலங்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணையில் அவருடைய வீட்டில் வைத்து அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அப்போது அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலமாகி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் சேஷுவோடு நடித்த மாறன் கண்கலங்க நம்மிடம் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

lollu sabha seshu died due to heart attack maran has shared some information

சேஷு கடந்த 10 நாட்களுக்கு முன்புவரைக்கும் நல்லபடியாக இருந்த நிலையில் திடீரென்று அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுவார் என்று ரசிகர்களும் அவருடைய நண்பர்களும் நம்பி இருந்த நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் காலமாகி இருக்கிறார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நடிகர் மாறன் இதுகுறித்து பேசுகையில், நான் இந்த தகவலை கேட்டதும் ரொம்பவே அதிர்ச்சியாக இருக்கிறேன். இதைப்பற்றி பேச முடியாத மனநிலையில்தான் இருக்கிறேன்... தாங்க முடியாத துயரத்தில் இருக்கிறோம்... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. கடந்த மாதத்தில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

அதில் அவருடைய நடிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டது... இப்போ அவருக்கு உடம்பு சரியில்ல என்று கேள்விப்பட்டதும் நாங்கள் எல்லோரும் அவரை பார்ப்பதற்காக தான் வந்துட்டு இருந்தோம். அதற்குள் அவர் இறந்து போய்விட்டார் என்ற தகவலை சொல்லி இருக்கிறார்கள். அதை கேட்டு என்னால் பேச முடியல என் சொல்லி என்று சொல்லி இருக்கும் நிலையில் அவரிடம் நீங்கள் சேஷூவை மருத்துவமனையில் போய் பார்த்தீர்களா? என்று எங்கள் நிருபர் கேட்க, அதற்கு மாறன் ஆமாம் நாங்க போய் பார்த்தோம் என்று கூறியிருக்கிறார்.

அதுபோல வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் கூட சந்தானத்தோடு சேஷூ,மாறன் பூசாரிகளாக நடித்திருப்பார்கள். இவர்கள் நடித்திருந்தார்கள் என்று சொல்வதை விடவும் அந்த படத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் செய்த காமெடி மற்றும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கவர்ந்திருந்தது. அதிலும் சேஷு அந்த திரைப்படத்தில் பரதநாட்டியம் ஸ்டேப் போட்டு இருப்பார்.

அது குறித்து கூட கடைசியாக அவர் பேசிய வீடியோவில், எனக்கு பரதநாட்டியம் எல்லாம் கொஞ்சம் கூட தெரியாது. அந்த நேரத்தில் இப்படி ஸ்டெப் வைங்க, அப்படி வைங்க என்று சொன்னாங்க, அதை அப்படியே நானும் செய்தேன். ஆனால் அது மக்கள் மத்தியில் இவ்வளவு பேசப்படும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லி இருந்தார். அதுபோல நான் மது குடிப்பதை விட்டு விட்ட பிறகுதான் எனக்கு மது குடிக்கிற மாதிரி அதிகமான கேரக்டர் வருகிறது.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நான் முழுநேர குடிகாரனாக காட்டப்படுகிறேன். ஆனால் நான் குடியை எப்போதே விட்டு விட்டேன் என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். அதுபோல தான் வாங்கும் கொஞ்சம் சம்பளத்தில் கூட தனக்காக எதுவும் சேர்த்து வைக்காமல் பலருக்காக உதவிகளை செய்து வந்தார். சமீபத்தில் நடந்த மழை வெள்ள பாதிப்பின் போது கூட இவர் பல உதவிகளை செய்திருந்தார்.

அப்போது சேஷூ, எனக்கு இதய நோய் இருக்கிறது நான் வெயிட் தூக்கக்கூடாது என்று டாக்டர்கள் சொல்லி இருந்தார்கள். ஆனால் நான் மாடியில் இருந்து 5 கிலோ 10 கிலோ அரிசி முட்டைகளை தூக்கிக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுக்கிறேன் என்று பேசி இருந்தார் . ஆனாலும் கடைசி நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு சிகிச்சைக்காக 10 லட்சம் பணம் தேவைப்பட்டபோது அவருக்காக நடிகர் அமுதவாணன் உட்பட ஒரு சில நடிகர்கள் பண உதவி கேட்டு இருந்தார்கள். ஆனால் அது கிடைத்ததா இல்லையா என்று எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பலருக்கு உதவி செய்த சேஷூ கடைசி நேரத்தில் உதவிக்காக காத்திருந்தார். இப்போது அவர் இந்த உலகத்தை விட்டு போய்விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+