சூப்பர் மாம் ஷோவில் லாங் ஜம்ப்பா...என்னங்க பண்றீங்க?
சென்னை: ஜீ தமிழ் டிவியில் சூப்பர் மாம் ஷோ சீசன் 2 துவங்கி இப்போது வாரம் தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட ஷோவில் லாங் ஜம்ப் செய்வது போல் டாஸ்க் வைத்து ஷூட் செய்து இருக்கிறார்கள்.
அப்போது நீபா தடுமாறி விழுந்து முகத்தில் பலமான அடியுடன் மயங்கி தண்ணீரில் விழுந்தார். ஆம்புலன்சில் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டாலும், ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லும் நிலைக்குத்தான் நீபா ஆளாகி இருந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். சூப்பர் மாம் என்று சாஃப்ட் டைட்டிலை வைத்து, பெரிய அதிரடி ஷோவாக நடத்தி வருகிறது ஜீ தமிழ் டிவி.

சூப்பர் மாம்
சூப்பர் மாம் முதல் சீசன் கடந்த வருடத்தில் துவங்கி அது சின்ன சின்ன டாஸ்க்ஸ் என்று எளிதாகத்தான் முடிந்தது. அடுத்து சூப்பர் மாம் சீசன் 2 வை இந்த வருடம் துவங்கிய ஜீ தமிழ் டிவி, இந்த ஷோவை இந்த வருடம் நீட்டித்து இருப்பதோடு, இதில் கலந்துக்கொள்ளும் அம்மாக்களுக்கு வீராங்கனை டாஸ்க் என்று வைத்து அவர்களை திணற அடித்து வருகிறது.

மாஸ்டர் சாந்தி
இந்த ரியாலிட்டி ஷோவில் சின்னத்திரை பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துக்கொண்டு வருகின்றனர். இதில் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாந்தி தனது மகனுடன் கலந்துக்கொண்டு இருக்கார். இதனால், சாந்தி நடித்து வரும் சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலில் கூட இவரால் நடிக்க முடியவில்லை. நடிப்பை ஒதுக்கிவிட்டு சூப்பர் மாம் ஷோவில் தனது மகனுடன் கலந்துக்கொண்டு கவனத்தை செலுத்தி வருகிறார்.

டான்சர் நீபா
டான்சர் நீபா பனிவிழும் நிலவு பாடலுக்கு நடனம் ஆடிய டான்சரின் பெண். இவரும் ஒரு டான்சர். நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக இளைய தளபதியின் காவலன் படத்தில் நடித்து இருந்தார். இவரும் தனது மகளுடன் இந்த ஷோவில் கலந்துக்க கொண்டு டாஸ்க்குகளை எதிர்க்கொண்டு வருகிறார். இவருக்குத்தான் அண்மையில் விபத்து நடந்துள்ளது.

அர்ச்சனா மகள்
நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா தனது மகளுடன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். தண்ணீருக்குள் ட்ரம்மை வச்சு. அதைத் தாண்டி தாண்டி ஒரு ட்ரம்மில் இருந்து இன்னொரு ட்ரம்முக்கு மேல் தாவி நிற்க வேண்டும். இந்த டாஸ்க்கை தன்னால் செய்ய இயலாது..உயரம் கம்மியான தனக்கு அவ்வளவு தூரத்துக்கு எகிறி குதிக்க முடியாது என்று சொல்லியும். எல்லாருக்கும் அப்படித்தான்.. உனக்கு மட்டும் இல்லை நீபா.. கமான்.. கமான் என்று அர்ச்சனா ஒரு புறம் துரிதப்படுத்துகிறார்.

மகளிடம் மைக்
மகளிடம் ஒரு மைக் கொடுத்து. அவரையும் அம்மா உன்னால் முடியும்.. லவ் யூ அம்மா. எனக்காக செய்யுங்கள் என்று சொல்ல வைக்கிறார்கள். குழைந்தை சொல்ல, சொல்ல அம்மாவும் அதன்படி குழந்தைக்காக என்று டாஸ்க்கை செய்கிறார்கள். கடைசியில் நீபா ட்ரம்மில் குதித்து நிற்க முடியாமல் முகத்தில் செம அடி பட்டு, தண்ணீரிலேயே மயங்கி விழுந்துவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications