அடப்பாவமே! நயன்தாராவுக்கு வந்த சோதனையை பாருங்க.. லேடி சூப்பர் ஸ்டார் நிலைமை இப்படி ஆகிடுச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நேரங்களில் சில விஷயங்கள் நாமே எதிர்பார்க்காத அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவிடும். அதேபோலத்தான் இப்போது நடிகை நயன்தாரா திருப்பதியில் மொட்டை தலையுடன் சாமி தரிசனம் செய்தது வைரலாகி வருவது. டாக்ஸிக் படம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா இதுபோல செய்ததாக கூறி வந்த நிலையில் இது குறித்த உண்மை வெளியாகி இருக்கிறது.

உண்மை நிலவரம்

உண்மை என்னவென்றால் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாக பரவும் இந்த போட்டோக்கள் உண்மையானவை இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதி சென்று இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வேற லெவலுக்கு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய தலைமுடியை மட்டும் காணாமல் செய்து மொட்டை அடித்தது போல மாற்றி இருக்கிறார்கள்.

Nayanthara Lady Superstar Tirupati

நயன்தாராவின் மொட்டை தலை போட்டோ

அதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் போட்டோவை பார்க்கும் போது நயன்தாரா முகமும், அவருடைய உடையும் அப்படியே ஒரிஜினல் போல இருக்கிறது. அதனால்தான் பலரும் முதல் பார்வையில் இது உண்மையான போட்டோஸ் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் முடியை மட்டும் பார்த்தால் அது ஏஐ வேலை என்பது தெளிவாக தெரிகிறது. சோசியல் மீடியாவில் சிலர் டாக்ஸிக் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படியா வேண்டுதல் என்று கலாய்த்து வருகின்றனர்.

விமர்சனங்கள்

இன்னும் சிலர் நயன்தாராவுக்கு படத்தின் மீது இவ்வளவு சென்டிமென்ட்டா? என்றும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே நயன்தாரா சின்ன படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் மட்டும் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேங்குறார் ஆனால் டாக்ஸிக் படத்திற்கு மட்டும் பிரமோஷனுக்கு வந்திருக்கிறார் என்று விமர்சனம் அவர் மீது இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டோ வந்ததும் உண்மை என்றே பலரும் நம்பி விட்டனர்.

டாக்ஸிக் பட தகவல்கள்

டாக்ஸிக் படத்தை மோகன் தாஸ் இயக்கி இருக்கிறார். கியாரா அத்வானி, ஹியுமா குரோஸி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தில் யாஷ்ஷின் சகோதரி கேரக்டரில் நயன்தாரா நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Nayanthara Lady Superstar Tirupati

ரசிகர்கள் கருத்து

மேலும் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டி உள்ளது. இதற்கிடையே நயன்தாராவின் மொட்டை புகைப்படம் வேற லெவலில் டிரெண்டாகிவிட்டது. நிஜத்தில் நயன்தாரா தலைமுடியுடன் திருப்பதிக்கு போய் இருக்கிறார். ஆனால் சோசியல் மீடியாவில் மட்டும் அவரை மொட்டை போட்டு அனுப்பி வைத்திருக்கிறார். உண்மையில் படம் ஹிட் ஆக வேண்டும் என்று நயன்தாரா கடவுளிடம் வேண்டினாரா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் ஏஐக்கு மட்டும் நயன்தாராவை மொட்டை போட வைக்கும் அளவுக்கு டாக்ஸிக் படத்தின் ஹைப் போய் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+