லாஸ்லியா விட்ட பெருமூச்சு.. நாங்க எதையும் பார்க்கலை.. சிரிச்சபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: லாவண்டர் கலர் உடையில் கலக்கலாக புன்னகை சிந்தி போட்டுள்ள லாஸ்லியாவின் போட்டோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களைக் குவித்து வருகின்றனர்.
பொதுவாக நடிகைகள் பலர் நடிகை ஆவதற்கு முன்பு தொகுப்பாளராகவும், செய்தியாளர் ஆகவும் இருந்துள்ளனர். அதுபோலத்தான் லாஸ்லியாவும் செய்தி வாசிப்பாளராக டிவி சேனல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்.
பள்ளிப்படிப்பு படிக்கும் போது மாடலிலும் சேர்ந்திருக்கிறார் .பின்னர்தான் அவர் ஒரு தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் .

நியூஸ் ரீடர் லாஸ்லியா
அவர் சக்தி தொலைக்காட்சி என்ற சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் .அதற்கு முன்பு அவர் நியூஸ் ஒன் சேனலிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் .அவரது நெருங்கிய நண்பரின் ஆதரவுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டார் .பிக்பாஸ் ஹவுஸில் நுழைந்த மிகவும் கவர்ச்சியான போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

பிக் பாஸ் பிரபலம்
இவருடைய உண்மையான பெயர் லாஸ்லியா மரியதாஸ். ஆனால் நடிப்புக்காக தனது பெயரை லாஸ்லியா என மாற்றி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றனர். அந்த வகையில் லாஸ்லியாவுக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் அந்த வீட்டிற்குள் மூன்றாவது சீஸனில் 100 நாட்கள் இருந்திருக்கிறார்.

3வது சீசன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 க்குள் நுழைந்த இரண்டாவது போட்டியாளர் அவர் என்பதால் அவர் நிகழ்ச்சியில் சிறப்பாக நடித்து தனது ரசிகர்கள் மற்றும் பிக் பஸ் தமிழில் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்து விடுவார் என எதிர்பார்த்தளவிலேயே இவரை அனைவருக்கும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் இவருக்காக பலர் ஆர்மி ஒப்பன் செய்து இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளத்தை தெறிக்க விட்டு வந்தனர் .

அதிகரிக்கும் ரசிகர்கள்
அதிலும் தற்போது வரைக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பல பேன்ஸ் பேஜ்கள் இருக்கின்றது. பிக்பாஸுக்குள் இருக்கும் போது இவருக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவினுக்கும் காதல் என்று கிசுகிசுப்பு எழுந்து வந்த நிலையில் உள்ளிருக்கும் வரை காதல் பட்டாம்பூச்சிகளாக பறந்து வந்த இவர்கள் வெளியே வந்ததும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து விட்டனர் .

காதல் போச்சு
அதுவும் தனது தந்தைக்காக தனது காதலை பிரிந்த இவரிடம் பலர் நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு வாய் திறக்காமல் இருந்துவந்தார் .தற்போது கவினின் பிறந்தநாள் அன்று அவருடைய ரசிகர்கள் அதிகமாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் நடித்த நடிகைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் .

போட்டோஷூட்
ஆனால் இவர் ஒரு பிறந்தநாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என கவினின் ரசிகர்கள் வருத்தம் அடைந்து வந்தனர். தற்போது கலக்கலாக போட்டோ ஷூட்டை எடுத்திருக்கும் இவர் இப்போதுதான் நம்பிக்கை மூச்சை விடுகிறேன் என கூறியிருக்கிறார். அப்படி என்றால் இவர் ரசிகர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுகிறார் என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றனர் .ஆனாலும் தன்னுடைய குறும்பான சிரிப்பினால் லாவண்டர் புடவையில் கலக்கும் இவரை விழி எடுக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications