LIK OTT: ஓடிடியில் வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. எப்போ, எதில் பார்க்கலாம்? லீக்கான தகவல்
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் பற்றிய ஓடிடி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இப்போ இளைஞர்கள் மத்தியில் ரொம்ப வேகமாக வளர்ந்து வரும் பெயர் என்றால் அது பிரதீப் ரங்கநாதன் தான். 'லவ் டுடே' மாதிரி ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகு, அவர் ஹீரோவாக நடித்த 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி (LIK)' படம் மீது ரசிகர்களுக்கு இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடவே படம் தியேட்டர்களில் வெளியானதும் நல்ல ஓப்பனிங் கிடைத்தது.

தியேட்டரில் வரவேற்பு எப்படி?
ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான இந்த படம், முதல் நாளிலேயே உலகம் முழுக்க சுமார் ₹9.93 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து ஓடிய இந்த படம், மொத்தமாக ₹50 கோடிக்கும் மேல வசூல் செய்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகின. ஆனா, ஒரு விஷயம் மட்டும் ரசிகர்களை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முன் 'லவ் டுடே', 'டிராகன்', 'டியூட்' மாதிரி படங்கள் எல்லாம் ₹100 கோடி கிளப்பில் சேர்ந்த நிலையில், இந்த படம் அந்த அளவுக்கு போகவில்லை. அதனால், "இது பிரதீப்பின் முதல் சுமாரான வெற்றியா?" என்ற கேள்வியும் எழுந்தது.
படத்தின் கதை
இந்த படம் ஒரு சாதாரண காதல் கதை இல்ல. சயின்ஸ்-ஃபிக்ஷன் டச் கொண்ட ரொமான்டிக் ஸ்டோரி.இதோட பெரிய பிளஸ் என்னனா, படத்தில் நடித்திருக்கும் ஸ்டார் காஸ்ட். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகி பாபு, சீமான், கவுரி கிஷன் கொஞ்சம் பல பிரபலங்கள் இருக்கின்றன அதேபோல இசைக்கு அனிருத். இந்த காம்போவே படத்துக்கு ஆரம்பத்திலேயே ஒரு ஹைப் கொடுத்தது.

ஓடிடி எப்போது ரிலீஸ்?
தியேட்டரில் ஓடிய பிறகு இப்போ எல்லாரும் எதிர்பார்ப்பது ஓடிடி ரிலீஸ் தான். 'லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது அதிலும் வரும் மே 15-ம் தேதி ஸ்ட்ரீமிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனா இதுவரைக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இந்த படம் ஆரம்பத்திலேயே பிரதீப் கிட்ட போகவில்லை. முதலில் இந்த கதையில் நடிக்க இருந்தவர் சிவகார்த்திகேயன். 2019-லேயே இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அந்த திட்டம் டிராப் ஆகிவிட்டது.
அதுக்குப் பிறகு பல வருடங்கள் அந்த கதை அப்படியே இருந்தது. இறுதியில், விக்னேஷ் சிவன் அதை பிரதீப் ரங்கநாதனிடம் கொண்டு போய், அவர் ஓகே சொன்ன பிறகுதான் இந்த படம் உயிர் பெற்றது. சுமார் 3 வருட போராட்டத்துக்கு பிறகுதான் இந்த படம் ரிலீஸ் ஆனது.

ரசிகர்கள் கருத்து
"புதிய கான்செப்ட் நல்லா இருக்கு... ஆனா இன்னும் எமோஷன் இருந்தா நல்லா இருந்திருக்கும். பிரதீப் ஸ்டைல் எப்போதும் போல யூத் கனெக்ட் இருக்கு, 100 கோடி போகவில்லைன்னாலும், பார்க்க வைக்கும் படம்.. அதாவது, படம் முழுக்க மோசம் இல்லை... அதே நேரத்தில் 'பிளாக்பஸ்டர்' என்ற அளவுக்கும் போகவில்லை என்பது தான் ரசிகர்களின் ரியாக்ஷன்.












Click it and Unblock the Notifications