ஜென்மங்கள் ஆயிரம் போதாது.. சினேகன் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்.. ஆனால் கன்னிகா கொடுத்த செம கேப்ஷன்
சென்னை: நடிகை கன்னிகா மற்றும் பாடல் ஆசிரியர் சினேகன் மூன்றாவது திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். அப்போது சினேகன் கன்னிகாவிற்கு புடவை ஒன்றை பரிசாக கொடுத்திருக்கும் நிலையில் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கன்னிகா அதற்கு நெகிழ்ச்சியான ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
சினிமா துறையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து பார்த்திருப்போம். ஆனால் ஒரு திரைப்படத்தில் கூட ஒன்றாக நடித்தது கிடையாது ஆனால் பல வருடங்களாக ரகசியமாக காதலித்து பிறகு பிரம்மாண்டமாக திருமணம் செய்த ஜோடி என்றால் சினேகன் மற்றும் கன்னிகா தான். 10 வருடங்களுக்கு மேலாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தாலும் எந்த இடத்திலும் ஒன்றாக சுத்தியது கிடையாதாம். அதனாலயே இவர்களுடைய காதல் அந்த நேரத்தில் ரகசியமாக இருந்திருக்கிறது.

இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களுடைய காதல் வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சினேகன் சமூக வலைதளத்தில் பெரியதாக எந்த போஸ்டும் போடுவதில்லை. ஆனால் இப்போது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு சேர்ந்து அதிகமான வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
கன்னிகா விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர் தான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சென்னையில் அதற்காக முயற்சி செய்தபோதுதான் சினேகனோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களுடைய பயணம் பிறகு காதலாக மாறியிருக்கிறது. சினேகன் கன்னிகாவிற்கு பல இடங்களில் உதவியதாக கன்னிகா பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
அந்த நேரத்தில் எல்லாம் முதலில் அவர் மீது எனக்கு மரியாதை தான் இருந்தது பிறகு தான் காதலித்தோம் என்று கன்னிகா கூறி இருக்கிறார். பொதுவாக திருமண வாழ்க்கையில் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது என்று சிலர் கூறுவார்கள். மனைவியை விட கணவனுக்கு அதிக வயது வித்தியாசம் இருந்தாலும் மனைவி மெச்சூரிட்டி இல்லாமல் இருப்பார் என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். ஆனால் அது எங்கள் விஷயத்தில் கிடையாது.
எனக்கும் சினேகனுக்கு அதிகமான வயது வித்தியாசம் இருக்கிறது. இது குறித்து பலர் எங்களை கிண்டல் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதுதான் எங்களுக்கு பிளஸ் நான். எனக்கு சரி எது தவறு எது என்பதை என்னுடைய கணவர் தான் எனக்கு சொல்லித் தருகிறார். அதுபோல நான் ஏதாவது அட்வைஸ் கொடுத்தாலும் அவர் ஏற்றுக்கொள்வார். எங்கள் இருவருக்கும் அதிகமான புரிதல் இருக்கிறது. ஆனாலும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம்.

ஆனாலும் நாங்கள் அதிகமான நேரம் பேசாமல் இருந்து விட மாட்டோம் என்று காதலோடு பேசி இருக்கும் கன்னிகா நடிகையாக மட்டுமல்லாமல் சிலம்பம் சுற்றுவதிலும், சமையல் செய்வதிலும், புத்தகம் எழுதுவது, ஓவியம் வரைவது என்று பல துறைகளில் திறமைசாலியாக இருக்கிறார். சமீபத்தில் இவர் ஹேர் ஆயில் பிசினஸ் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய மூன்றாவது திருமண நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டிருக்கிறது.
அப்போது சினேகனும் அவருடைய மனைவி கன்னிகாவும் இருவரும் ஜோடியாக ஒரே வண்ணத்தில் டிரஸ் போட்டு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். பிறகு சினேகன் தன்னுடைய மனைவிக்காக ஒரு புடவையை வாங்கி பரிசளித்திருக்கிறார். அதை பார்த்து கன்னிகா சந்தோஷப்பட்டு இருக்கிறார்.
அதோடு இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கன்னிகா "வண்ணம் மாறாத காதல்.. இன்னும் மாறாத வாழ்க்கை... மூன்றாண்டு கடந்தும் இல்லறம்.. முதல் காதலாய் தோன்றுகிறது என்று அதில் அவர் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த தம்பதிக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications