நீங்க இரவு என்ன கலக்குறீங்களோ அதுதான்! கலாய்க்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்! குரோஷியின் பஞ்ச்
சென்னை:விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'-யில், நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி, கோமாளி குரேஷி பேசிய பஞ்ச் டயலாக், தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், குரேஷியின் இந்தப் பேச்சு இணையவாசிகள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்
தமிழ் திரையுலகில் பிரபலமான முகமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு நடிகராகவும், பிரபல சமையல் கலைஞராகவும் அறியப்படுகிறார். இவர், 'மெகந்தி சர்கஸ்' மற்றும் 'பென்குயின்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் பல பெரிய செலிபிரிட்டிகளின் இல்ல விசேஷங்களுக்கும் இவர்தான் கேட்டரிங் வேலைகளைச் செய்து கொடுத்து வருகிறார். இவரது சொந்த ஊர் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள மாதம்பட்டி என்பதால், அவர் 'மாதம்பட்டி ரங்கராஜ்' என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சை
மாதம்பட்டி ரங்கராஜ், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் புதிய நடுவராக இணைந்ததிலிருந்து, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சமீபத்தில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தனது கணவர் என்றும், தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார். இந்தச் செய்தி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தன்னுடைய குழந்தையை அபார்ஷன் செய்ய சொல்லி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் ஜாய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.
ஏற்கனவே, மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில், இது அவரது இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சையை எழுப்பியது. இந்த விவகாரம் குறித்து ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து பதிவிட்டு வந்தாலும், ரங்கராஜ் இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
குரேஷியின் டைமிங் காமெடி
இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம், இந்த விவகாரத்தைப் பேசுபொருளாக மாற்றியுள்ளது. சமீபத்திய எபிசோடில், ரங்கராஜை அறிமுகப்படுத்தும்போது, "அவர் நீதி, நேர்மை, நியாயம்" என்று புகழ்ந்து பேசப்பட்டது. அப்போது, ரகுவரன் வேடத்தில் இருந்த குரேஷியைப் பார்த்து, தொகுப்பாளர் ரக்ஷன், "அவர்தான் நீதி" என்று சொல்ல, அதற்கு குரேஷி, "அவரா நீதி? அவர் முகத்தைப் பார்த்து நீதி என்று சொல்லிவிட்டு ஒரு 10 செகண்ட் சிரிக்காமல் இருங்க பார்ப்போம்" என்று கவுன்ட்டர் அடித்தார்.
இதைக் கேட்ட மாதம்பட்டி ரங்கராஜ், உடனடியாக மேடையிலிருந்து இறங்கி வந்து, குரேஷியை அடித்துவிட்டுச் சிரித்தார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலான நிலையில், இது ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல, மற்றொரு வீடியோவில், ரங்கராஜ், குரேஷியிடம் "உனக்கு மிக்ஸிங் தெரியுமா?" என்று கேட்டதற்கு, "எல்லாம் நீங்க பண்றதுதான்" என்று குரேஷி சிரிப்புடன் பதில் அளித்திருப்பார். இந்த நகைச்சுவையான பதில்கள், குரேஷி வேண்டுமென்றே ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கலாய்ப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர், இது வெறும் டைமிங் காமெடிதான் என்றும் கூறி வருகின்றனர்.
தற்போது, மாதம்பட்டி ரங்கராஜின் சர்ச்சையும், குரேஷியின் காமெடியும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் குறித்து ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், ரங்கராஜ் விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications